`ஏழை மாணவர்களுக்கு உதவுவதைவிட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரிதில்லை!' - நெகிழும் கத்தார் தமிழர் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

`ஏழை மாணவர்களுக்கு உதவுவதைவிட பிறந்தநாள் கொண்டாட்டங்கள் பெரிதில்லை!' - நெகிழும் கத்தார் தமிழர்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
உறவினர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் செய்வது மட்டுமல்ல உதவி. முகம் தெரியாத மனிதர்களுக்கு செய்யும் உதவிதான் மிகப்பெரியது. அந்த வகையில், திரைகடல் ஓடி திரவியம் தேடி, ஏழை மானவர்களுக்கு உதவும் தமிழர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் வேல்முருகன். மதுரையைச் சேர்ந்த வேல்முருகன். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கத்தாரில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவருகிறார். ஆண்டுக்கு ஒருமுறை இந்தியா வரும் வேல்முருகன், அரசுப் பள்ளி மற்றும் ஏழைக் குழந்தைகளுக்கு உதவிகள் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். இதுவரை சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மாணவர்களுக்கு உதவிகள் செய்துவந்திருகிறார். இந்த நிலையில், இந்த ஆண்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்துள்ளார். யூடியூப் மூலம், அரசுப் பள்ளிகளைத் தேடத் தொடங்கியுள்ளார். அப்போது, திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகேயுள்ள மேல கோவில்பட்டி கிராமத்தைத் தேர்ந்தெடுத்தார். இந்தக் கிராமத்தில் அதிகமானோர் ராணுவத்தில் பணியாற்றுபவர்கள். இந்தப் பள்ளிக்கு உதவி செய்ய முடிவு செய்தவர், பள்ளி தலைமையாசிரியரை தொடர்புகொண்டு பேசியிருக்கிறார். மாணவர்களுக்குத் தேவையான, கல்வி உபகரணங்களை வாங்கித் தருவதாக உறுதியளித்தார்.
அதன்படி, கத்தாரிலிருந்து சென்னை வந்தவர், தன் மனைவி திரிபுர சுந்தரி, மகன் விக்னேஷ் ஆகியோரை அழைத்துக்கொண்டு வத்தலகுண்டு வந்துசேர்ந்தார். ஸ்கூல் பேக், நோட்டுகள், புத்தகங்கள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களை பள்ளித் தலைமையாசிரியர் பாண்டியம்மாள், ஊர் பிரமுகர்கள் ஜான், ஜெகன் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் மாணவர்களுக்கு பொருள்களை வழங்கினார். அப்போது பேசிய வேல்முருகன், ``பிறந்தநாளை, கேக் வெட்டி ஆடம்பரமாக கொண்டாடுவது எனக்குப் பிடிக்கவில்லை. என் மகனின் பிறந்தநாளை ஏழை மாணவர்களுக்கு உதவும் நாளாக மாற்ற முடிவு செய்தேன். கடந்த 15 ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறேன். ஏழை மாணவர்களுக்கு உதவும்பொழுது, என் மகனின் பிறந்த நாளுக்காக இதைச் செய்கிறேன். எனச் சொல்லமாட்டேன். இந்த முறைதான் முதல்முறையாக சொல்கிறேன். ஏழை மாணவர்களுக்கு உதவி செய்வதைவிட, பிறந்தநாள் கொண்டாட்டம் பெரியதில்லை'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews