சினிமா தொழிலாளர் குழந்தைகள் மத்திய கல்வி உதவி பெற வாய்ப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 19, 2019

சினிமா தொழிலாளர் குழந்தைகள் மத்திய கல்வி உதவி பெற வாய்ப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை பீடி மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள், மத்திய அரசின் கல்வி உதவித் தொகை பெற, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இது குறித்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி, மத்திய நல கமிஷனர், பழ.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், பீடி, சுண்ணாம்புக்கல், டோலமைட் சுரங்க தொழிலாளர்கள் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, கல்வி உதவித் தொகை வழங்குகிறது. ஒன்றாம் வகுப்பு முதல், தொழில் முறை படிப்பு வரை, 250 ரூபாய் முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை, உதவித் தொகை கிடைக்கும்.உதவித் தொகையை பெற, www.scholarships.gov.in என்ற, தேசிய கல்வி உதவித் தொகை இணையதள பக்கத்தில், 'ஆன்லைன்' வழியாக, அக்., 31க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்கும் வசதி, இம்மாதம், 15ம் தேதி துவங்கியது.மாணவர்கள், தங்கள் பெயரில் பொதுத்துறை வங்கியில் கணக்கு வைத்திருக்க வேண்டும்; 'ஆதார்' எண்ணை இணைத்திருப்போர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.மேலும் விபரங்களுக்கு, 0462 -- 2578266 என்ற எண்ணிலும், scholarship201718tvl@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரியிலும் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews