இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் விருப்பக்கல்லூரி பட்டியல் நாளை முதல் பதிவேற்றம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் விருப்பக்கல்லூரி பட்டியல் நாளை முதல் பதிவேற்றம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்ஜினியரிங் ஆன்லைன் கலந்தாய்வில் நாளை முதல் மாணவர்கள் விருப்பக்கல்லூரி பட்டியலை பதிவேற்றம் செய்யலாம்.இன்ஜினியரிங் கலந்தாய்வு கடந்த ஆண்டு முதல் இணையதளம் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 25 முதல் 28ம் தேதி வரை முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள், மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கும் பிளஸ் 2வில் தொழிற்கல்வி படித்த மாணவர்களுக்கும் சென்னையில் நேரடி கலந்தாய்வு நடந்தது. அதைத்தொடர்ந்து தரவரிசை பட்டியல் அடிப்படையிலான இணையவழி கலந்தாய்வு ஜூலை 3ம் தேதி தொடங்கியது. முதல் சுற்றுக்கு தரவரிசை பட்டியலில் முதல் ரேங்க் முதல் 9,872 ரேங்க் வரை பெற்றவர்கள் சீட் தேர்வு செய்ய அழைக்கப்பட்டுள்ளனர். ஜூலை 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை மாணவர்கள் இதற்கான கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்க கட்டணமான 5,000 இணையதள வங்கி சேவை/ கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/ பணம் செலுத்தும் ஆப்கள் மூலமாகவும் பணம் செலுத்தலாம். 42 இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை மையத்தில் சீட் தேர்வு செய்ய விரும்புவோர் ‘‘secretary, TNEA2019’’ என்ற பெயரில் சென்னையில் பணமாக்கத்தக்க வகையில் 5000க்கான டிடி சமர்ப்பிக்கலாம். எஸ்சி/எஸ்சிஏ/எஸ்டி பிரிவு மாணவர்களுக்கு 1000 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தரவரிசைப்பட்டியலில் 9,873 முதல் 30,926 வரை ரேங்க் பெற்றவர்கள் இரண்டாம் சுற்று கலந்தாய்வுக்கு நாளை முதல் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews