நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ் நிறுத்தம்: மாணவர்களுக்கு பாதிப்பு வருமா - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 04, 2019

நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ் நிறுத்தம்: மாணவர்களுக்கு பாதிப்பு வருமா

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஆன்லைன் மூலம் சான்றிதழ் வழங்குவது நடைமுறைக்கு வந்துள்ளதால், வருவாய் துறையில், &'பிக்&' எனப்படும், நிரந்தர ஒருங்கிணைந்த சான் றிதழ் வழங்குவது நிறுத்தப் பட்டுள்ளதாகவும், தனித் தனியாக வழங்கப்படும் சான்றிதழ்களை ஏற்குமாறு, கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.புதுச்சேரி மாநிலம் முழுவதும் வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு குடியிருப்பு, வருமானம், ஜாதி, குடியுரிமை உள்ளிட்ட சான்றிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன.மாணவர்களின் நலன் கருதி, மேற்கண்ட சான்றிதழ்களை தனித்தனியாக வழங்காமல், &'பிக்&' எனப்படும், நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ் ஆக வழங்கி வந்தது. மாணவர்கள் சிரமமின்றி, தாங்கள் பயிலும் பள்ளி மூலமாகவே விண்ணப்பித்து, &'ஒருங்கிணைந்த சான்றிதழ்&' பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.இந்நிலையில், மேற்கண்ட சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் விண் ணப்பித்து, பெற்றுக் கொள் ளும் நடைமுறை, கடந்த 1ம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.
தேவைப்படும் சான்றிதழுக்கு, உரிய ஆவணங்களுடன், ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். அது உரிய வருவாய் அதிகாரிக்கு சென்றடையும். அவர் பரிசீலித்து ஒப்புதல் தந்தவுடன், சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதன் மூலம், மக்கள் அலைச்சல் இல்லாமல், குறித்த காலத்தில் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம்.ஆன்லைன் சான்றிதழ் அமலுக்கு வந்துள்ளதால், &'பிக்&' சான்றிதழ்கள் நிறுத்தப்படுவதாக வருவாய் துறை அறிவித்து, அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.சிக்கல் இல்லைஏற்கனவே பெறப்பட்ட &'பிக்&' சான்றிதழ் மூலம், சென்டாக், ஜிப்மர் உள்பட பல்வேறு உயர் கல்வி சேர்க்கைக்கு மாணவ மாணவிகள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த சூழலில், &'பிக்&' சான்றிதழ் வினியோகம் நிறுத்தப் பட்டுள்ளதால், சிக்கல் ஏற்படுமா என மாணவர்களிடம் குழப்பம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில், ஜூலை 1ம் தேதிக்கு முன் வழங்கப்பட்ட நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ்கள், அதில் குறிப்பிடப்பட்டுள்ள காலம் வரை செல்லும்.
இந்த &'பிக்&' சான்றிதழ்கள் மூலம், சென்டாக் உட்பட, உயர் கல்விக்கு விண்ணப்பித்துள்ள மாணவர்களுக்கு சிக்கல் இல்லை. &'பிக்&' சான்றிதழின் காலக்கெடு முடிந்த பிறகு, ஒவ்வொரு சான்றுக்கும் தனித்தனியாக ஆன்-லைனில் புதிதாக விண்ணப்பிக்க வேண்டும். அப்போது, பழைய &'பிக்&' சான்றிதழை ஒரு ஆவணமாக சேர்த்து விண்ணப்பிக்கலாம்&' என தெரிவித்தனர் .அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்மாவட்ட கலெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம், பள்ளி, கல்லுாரி சேர்க்கை மற்றும் வேலை வாய்ப்புக்காக குடியுரிமை, சாதி, குடியிருப்பு, வருமான சான்றிதழ்கள், &'நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ்&' ஆக மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது.தற்போது, இணையதளம் மூலம் சான்றிதழ் வழங்கும் சேவை துவக்கப்பட்டுள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் நிரந்தர ஒருங்கிணைந்த சான்றிதழ் பெற முடியாது. குடியிருப்பு, குடியுரிமை, சாதி, வருமானம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களை தனித்தனியாகத் தான் பெற முடியும். இவ்வாறு தனித்தனியாக பெறப்படும் சான்றிதழ்களை அரசு அலுவலகங்கள், அதிகாரிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews