ஜிப்மர் ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள்; நீதி விசாரணைக்கு வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, July 04, 2019

ஜிப்மர் ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள்; நீதி விசாரணைக்கு வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜிப்மரில், புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் இடம் பெற்றது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., வையாபரி மணிகண்டன் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி காங்.,-தி.மு.க., கூட்டணி அரசு, மாணவர்களுக்கு துரோகம் இழைத்து வருகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட ஜாதியினருக்கான இடஒதுக்கீட்டை காலத்தோடு அமல்படுத்தாததால் புதுச்சேரிக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் கிடைக்கவில்லை.தனியார் மருத்துவக் கல்லுாரிகள் புதுச்சேரிக்கு வழங்க வேண்டிய 50 சதவீத இட ஒதுக்கீட்டையும் அரசு பல ஆண்டாக பெறவில்லை.இந்நிலையில், ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் சேர்க்கையில் முறைகேடு நடந்து வருவது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. புதுச்சேரி ஜிப்மர், காரைக்கால் கிளை மருத்துவக்கல்லுாரியில் மொத்தம் உள்ள 200 இடங்களில் 55 இடங்கள் புதுச்சேரி மாநில மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த இட ஒதுக்கீடு பட்டியலில், 110 வெளிமாநில மாணவர்கள் பெயர்கள் இடம் பெற்றது.இதுகுறித்து முன்கூட்டியே அறிந்து பிரச்னை ஏற்பட்டதால், போலியாக சான்றிதழ் பெற்ற 110 பேரும் கவுன்சிலிங்கிற்கு வரவில்லை. அரசு அதிகாரிகள், போலியாக சான்றிதழ் வழங்கியதே இதற்கு காரணம்.எனவே, 110 வெளிமாநில மாணவர்கள் புதுச்சேரி இட ஒதுக்கீட்டில் இடம் பெற்றது எப்படி என்பது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணை நடத்த புதுச்சேரி அரசு உத்தரவிட வேண்டும்.புதுச்சேரி மாநில அரசு நீதி விசாரணை நடத்த முன்வராவிட்டால் மத்திய உள்துறை அமைச்சகம் தாமாக முன்வந்து ஜிப்மர் மாணவர் சேர்க்கை குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews