👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஜிப்மரில் எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்ந்த மாணவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும் என சென்டாக் மாணவர்கள் பெற்றோர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.இது குறித்து சென்டாக் மாணவர்கள் பெற்றோர் சங்க பொதுச் செயலர் கல்யாணசுந்தரம் விடுத்துள்ள அறிக்கை: புதுச்சேரி அரசு மருத்துவ கல்லுாரியில் 30 எம்.பி.பி.எஸ்., &'சீட்&' அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களை பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு எப்படி அரசு ஒதுக்கப்போகிறது என்பதை கலந்தாய்விற்கு முன் வெளியிட வேண்டும்.ஜிப்மர் மருத்துவ கல்லுாரி கலந்தாய்வில், புதுச்சேரி மாணவர்கள் 54 பேர் சேர்ந்துள்ளனர். இவர்கள் ஏற்கனவே சென்டாக்கிற்கும் விண்ணப்பித்துள்ளனர்.இவர்களை சேர்த்து சென்டாக் &'மெரிட் லிஸ்ட்&' வெளியிட்டால் கவுன்சிலிங்கில் வீணான காலதாமதம் ஏற்படும். எனவே இம் மாணவர்களின் பெயர்களை அவர்களது ஒப்புதலோடு நீக்க வேண்டும். இதன் மூலம் அடுத்த இடத்தில் இருக்கும் மாணவர்களுக்கு இடம் கிடைக்கும். எனவே எஸ்.எம்.எஸ்., மூலமாக உறுதிப்படுத்தி, தரவரிசை பட்டியலை வெளியிட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U