ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 06, 2019

ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாணவியை, ஆசிரியர் பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, அரசுப்பள்ளியை, பெற்றோர் முற்றுகையிட்டனர். சேலம், வேம்படிதாளம் அரசு மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட, மாணவ - மாணவியர் படிக்கின்றனர். கடந்த கல்வியாண்டில், விடுதியில் தங்கி படித்த, பிளஸ் 2 மாணவி, வேதியியல் ஆசிரியர், பாலாஜி, 42, என்பவரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கர்ப்பமாக உள்ளதாகவும், அப்பெண்ணின் பெற்றோர், பள்ளியில் புகார் கொடுத்ததாகவும் தகவல் பரவியது.இதையடுத்து, நேற்று காலை, 10:00 மணி முதல், மாணவியரின் பெற்றோர், பள்ளி முன் குவிந்து, முற்றுகை போராட்டம் நடத்தினர். சேலம் உதவி கமிஷனர், ஈஸ்வரன் மற்றும் கொண்டலாம்பட்டி போலீசார், பள்ளிக்கு வந்து, பெற்றோரிடம் பேச்சு நடத்தினர். பள்ளி நிர்வாகம் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை, பெற்றோர் சுமத்தினர்.அவர்களை கலைந்து செல்லுமாறு, போலீசார் எச்சரித்ததால், இரு தரப்புக்கும் இடையே, தள்ளு முள்ளு ஏற்பட்டது.'பெற்றோர் சந்திப்புக்கூட்டம், 9ல் நடக்கும். மாணவியரின் பாதுகாப்புக்கு, உத்தரவாதம் கொடுக்கப்படும்' என, பள்ளி நிர்வாகம் மற்றும் போலீசார் உறுதியளித்ததால், நான்கு மணி நேரம் நடந்த போராட்டம் முடிவுக்கு வந்தது.
இது குறித்து, பெற்றோர் தரப்பில் கூறியதாவது:இதே பள்ளியில், சில மாதங்களுக்கு முன், மாணவி ஒருவர், காதல் விவகாரத்தில், மாடியிலிருந்து குதித்து, தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் ஒருவர், வகுப்பு நடக்கும் போதே, வளாகத்தில் மது அருந்தினார்.ஒழுக்கம் தவறும் ஆசிரியர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்கள் மகள்களை, பள்ளிக்கு அனுப்ப அச்சமாக உள்ளது. விடுதியில் தங்கி படிக்கும் மாணவியரின் பாதுகாப்பை, அரசு உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். தலைமறைவுகுற்றச்சாட்டுக்கு உள்ளான, வேதியியல் ஆசிரியர், பாலாஜி, தற்போது தலைமறைவாகிவிட்டார். விசாரித்து, நடவடிக்கை எடுக்க, போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உண்மையெனில், கண்டிப்பாக, துறை ரீதியான நடவடிக்கை பாயும். ராமசாமி மாவட்ட கல்வி அலுவலர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews