18 ஆண்டுகளுக்கு பின்பு கல்லூரி கட்டணங்களை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 17, 2019

18 ஆண்டுகளுக்கு பின்பு கல்லூரி கட்டணங்களை உயர்த்தி அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலை., கல்விக் கட்டணம் உயர்வு!
இளநிலை படிப்புக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயிலிருந்து 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயிலிரு‌ந்து 17 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. எம்.இ, எம்.டெக் படிப்புகளுக்கான கட்டணம் 9 ஆயிரம் ரூபாயி‌விருந்து 20 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2019-20 கல்வியாண்டிலிருந்தே புதிய கட்டணத்தை அமல்படுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. இந்தக் கட்டண உயர்வு, அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் அதன் உறுப்புக்கல்லூரிகளுக்கு மட்டுமே பொறுந்தும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் இணைப்புக் கல்லூரிகளுக்கு பொறுந்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராசிரியர்களி‌ன் ஊதியம், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, கல்விக் கட்டணத்தை உயர்த்த அண்ணா பல்கலைக் கழகம் கோரி இருந்தது. கட்டண உயர்வுக்கு மறுப்பு தெரிவித்த தமிழக உயர்கல்வித்துறை, அண்ணா பல்கலைக்கழகம் முன்வைத்திருந்த கட்டண உயர்வை சற்று குறைத்து, ஒப்புதல் அளித்தது. கல்லூரிகளில் கல்விக் கட்டணத்தை உயர்த்தி அண்ணா பல்கலை., உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்ணா பல்கலை மற்றும் 13 உறுப்புக் கல்லூரிகளில் கல்விக் கட்டணம் ரூ.9,000லிருந்து ரூ.15,000ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டணங்கள் அண்ணா பல்கலை., உறுப்பு கல்லூரிகளுக்கு மட்டும் பொருந்தும், affiliated college எனப்படும் இணைப்பு கல்லூரிகளுக்கு பொருந்தாது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews