ஒரு லட்சம் புள்ளிகளால் கலாம் ஓவியம்:பழநி மாணவர்கள் அமர்க்களம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, July 27, 2019

ஒரு லட்சம் புள்ளிகளால் கலாம் ஓவியம்:பழநி மாணவர்கள் அமர்க்களம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே புஷ்பத்துார் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளியில் ஒரு லட்சம் புள்ளிகளால் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவத்தை மாணவர்கள் வரைந்துள்ளனர்.அப்துல்கலாம் நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதற்காக இப்பள்ளி ஓவிய ஆசிரியர்கள் சோலை அபிராமி, கணேஷ், கரன், ஒருங்கிணைப்பாளர் பக்ருதீன்ெஷரிப் வழிகாட்டுதலில் புள்ளி ஓவியமுறையில் கலாம் ஓவியத்தை வரைந்துள்ளனர்.பள்ளியின் 780 மாணவர்களும் இணைந்து புள்ளிகள் வைத்தனர். மொத்தம் ஒரு லட்சம் புள்ளிகளில் 30 அடி உயரம், 20 அடி அகலத்தில் அப்துல் கலாம் உருவத்தை வரைந்துள்ளனர்.அதில் 'கனவு என்பது துாக்கத்தில் வருவதல்ல. உங்களை துாங்கவிடாமல் செய்வது' என அவரது பொன்மொழியையும் எழுதியுள்ளனர். ஓவியம் வரைய மூன்று நாட்கள் ஆனது. மாணவர்களை பள்ளி நிர்வாகி சுவாமிநாதன், முதல்வர் வசந்தா, ஆசிரியர்கள் வாழ்த்தினர். இன்று அப்துல்கலாம் ஓவியத்திற்கு மலர்துாவி அஞ்சலி செலுத்துகின்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews