149 ஆண்டுகளுக்கு பின் வரும் அபூர்வ சந்திர கிரகணம்.! பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 16, 2019

149 ஆண்டுகளுக்கு பின் வரும் அபூர்வ சந்திர கிரகணம்.! பரிகாரம் செய்ய வேண்டிய நட்சத்திரங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இன்று நள்ளிரவு (புதன்கிழமை நள்ளிரவு) சந்திர கிரகணம். இந்த சந்திர கிரகணத்தால், சில நட்சத்திரங்கள் பரிகாரம் செய்துகொள்ளவேண்டும். கிரகணம் முடிந்ததும் குளித்துவிட்டு, ஆலயங்களுக்குச் சென்று தீபமேற்றி வழிபடுவது சிறந்த பரிகாரம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இன்று 16ம் தேதி செவ்வாய்க்கிழமை. இன்றைய தினம் நள்ளிரவு அதாவது 17ம் தேதி புதன்கிழமை நள்ளிரவு 1.30 மணிக்கு கிரகணம் தொடங்குகிறது. பின்னர் 3.02 மணிக்கு கிரகணம் உச்சிக்குச் செல்கிறது. அதாவது மத்திய நேரமாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதையடுத்து, அதிகாலை 4.30 மணிக்கு கிரகணம் முடிகிறது. பொதுவாகவே, கிரகண காலங்களின் போது, வெளியே செல்லக் கூடாது. குறிப்பாக, கர்ப்பிணிகள் வெளியே செல்வதை அறவே தவிர்க்கவேண்டும். கிரகணத்துக்கு தோஷம் உண்டு; தீட்டு உண்டு. எனவே, கிரகண நேரத்தில், நாம் தொட்டுப் பயன்படுத்தும் ஆடைகள், போர்வை முதலானவற்றை விடிந்ததும் நனைத்து உலர்த்தவேண்டும் என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். அதேபோல், ஒரு வருடத்துக்கு 96 தர்ப்பணங்கள் உண்டு. அதாவது வருடத்தில் 96 முறை தர்ப்பணம் செய்யச் சொல்கிறது சாஸ்திரம். இந்தப் பட்டியலில், கிரகண கால தர்ப்பணத்துக்கும் முக்கியமானதொரு இடம் உண்டு. கிரகணம் தொடங்கி, மத்தியில் இருக்கிற நேரங்களில், அதிகாலை 3.30 மணிக்கு எழுந்து, குளித்துவிட்டு, தர்ப்பணம் செய்யவேண்டும். இதன் பின்னர், கிரகணம் முடிகிற நேரத்தில், அதாவது காலை 4.30 மணிக்கு மீண்டும் நீராடவேண்டும். கிரகணத் தோஷம், தீட்டு, பீடை முதலானவை அப்போதுதான் விலகும் என்பதாக ஐதீகம். கிரகண காலத்தில், எதுவும் சாப்பிடக்கூடாது. மேலும் கிரகண காலத்தில், சொல்லவேண்டிய மந்திரம் ஒன்றும் உள்ளது. இந்த மந்திரத்தை எவர் வேண்டுமானாலும் சொல்லலாம். குறிப்பாக, பரிகார நட்சத்திரக்காரக்காரர்கள் அவசியம் சொல்லவேண்டும். அந்த மந்திரம் இதுதான்... யோஸெள வஜ்ரதரோ தேவ: நக்ஷத்ராணாம் ப்ரபுர்மதி: ஸஹஸ்ரநயன சந்த்ர: க்ரஹ பீடாம் வ்யபோஹது// இந்த மந்திரத்தை உச்சரித்துக்கொண்டே இருப்பது உத்தமம். இயலாதவர்கள், இந்த மந்திரத்தை ஒரு பேப்பரில் எழுதி வைத்து, பக்கத்தில் வைத்துக்கொள்ளலாம். அந்தக்காலங்களில், ஓர் ஓலையில் எழுதி, நெற்றியில் பட்டம் போல் கட்டிக்கொள்வார்கள். இப்போது அப்படியெல்லாம் இல்லை. எனவே, மந்திரத்தை முடிந்தவரை சொல்லிக்கொண்டே இருப்பது தோஷத்தில் இருந்து நம்மை அரணென இருந்து காக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரங்கள்: பூராடம், உத்திராடம், திருவோணம், கார்த்திகை, உத்திரம். சந்திர கிரகணம், கேது கிரஸ்தம்: பரிகாரம் செய்யவேண்டிய நட்சத்திரக்காரர்கள், கிரகணம் முடிந்ததும், வெற்றிலை, பாக்கு, பழம், தேங்காய் (முடிந்தால் மட்டைத்தேங்காய்) ஆகியவற்றுடன் கொள்ளு தான்யமும் தட்சணையும் ஆச்சார்யர்களுக்கு தானமாக வழங்கவேண்டும். பிறகு கோயிலுக்குச் சென்று, சுவாமி தரிசனம் செய்து, தீபமேற்றி வணங்கினால், கிரகண தோஷம் இல்லை என்கிறார் முநீஸ்வர சாஸ்திரிகள். கிரகணத்தின் மத்திய நேரத்தில் ஒரு முறை தர்ப்பணம் செய்யவேண்டும். அதன் பிறகு, ஆடி மாதம் தட்சிணாயன புண்ய காலத் தொடக்கத்தையொட்டி, மாத தர்ப்பணம் செய்யவேண்டும். பூரண சந்திர கிரகணம், இன்று நிகழ்கிறது. இதை, இந்தியாவில், வெறும் கண்ணால் பார்க்க முடியும்.சூரியன், பூமி, சந்திரன் இவை மூன்றும், ஒரே நேர்கோட்டில் வரும் போது, கிரகணம் உண்டாகிறது. அப்போது, பூமியின் நிழல், நிலவின் மீது விழுந்தால், அது, சந்திர கிரகணம் என, அழைக்கப்படுகிறது. இதன்படி, பூரண சந்திரகிரகணம் இன்று நள்ளிரவு, 12:13 மணிக்கு தொடங்குகிறது; பின், 1:31க்கு உச்சம் அடைந்து, அதிகாலை, 4:30க்கு முடிகிறது.சந்திர கிரகணத்தன்று, தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும், ஆடி மாதமும் பிறக்கிறது. எனவே, சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக்கூடிய தர்ப்பணத்துடன், ஆடி மாதம் பிறந்த பின், மறுபடியும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். திருப்பதி கோவிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த சந்திர கிரகணம் சில நாடுகளில் ஜூலை 16ஆம் தேதி இரவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவில் சந்திர கிரகணம் ஜூலை 17ஆம் தேதி (நாளை) அதிகாலை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.Sky enthusiasts in the country will witness a three-hour long partial lunar eclipse early Wednesday பொதுவாக பூமி சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே நேர்க்கோட்டில் வரும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது, மேலும் இந்த நிகழ்வின்போது பூமியின் நிழல் சந்திரன் மீது விழந்து அதனை மறைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே.. குறிப்பாக 149 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நிகழும் அபூர்வமான இந்த சந்திர கிரகணம் நாளை அதிகாலை நிகழ உள்ளது. மேலும் சந்திர கிரகண நிகழ்வின்போது பூமியின் நிழல் பகுதி அளவு மட்டுமே சந்திரனை மறைக்கும். சூரியன் மற்றும் சந்திரனுக்கு இடையே பூமி சரியான நேர்கோட்டில் அமையாமல் பகுதியளவு நேர்கோடாக வருவதால் பாதி சந்திர கிரகணம் நாளை நடக்கும் என்று அறிவியல் ஆய்வாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சில நாடுகளில் .. இந்த சந்திர கிரகணம் சில நாடுகளில் ஜூலை 16ஆம் தேதி இரவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தியாவில் சந்திர கிரகணம் ஜூலை 17ஆம் தேதி (நாளை) அதிகாலை நடக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 11 வயது சிறுமியின் ஆப்பிள் ஐபோன் தீப்பிடித்து எரிந்துள்ளது! காரணம் இதுதான்! நிழல் சந்திரன் மீதிருந்து விலகிக்கொண்டே வரும் நள்ளிரவு 12.12-மணிக்கு துவங்கும் இந்த சந்திர கிரகணம் நிகழ்வு, மெல்ல மெல்ல வளர்ந்து அதிகாலை 1.31 மணிக்கு முழுமை அடையும் என்றும், பின்னர் சிறது சிறிதாக பூமியின் நிழல் சந்திரன் மீதிருந்து விலகிக்கொண்டே வரும். குறிப்பாக அதிகாலை 4.29மணிக்கு சந்திர கிரகணம் முடிந்துவிடும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews