சிறப்புப்பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று மருத்துவ கலந்தாய்வு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, July 08, 2019

சிறப்புப்பிரிவில் விண்ணப்பித்தவர்களுக்கு இன்று மருத்துவ கலந்தாய்வு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிக்க சிறப்புப்பிரிவு இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வுக்கு இணையதளத்தில் விண்ணப்பித்தல் ஜூன் 7ம் தேதி தொடங்கி 20ம் தேதி முடிந்தது. அரசு ஒதுக்கீடு இடங்களுக்கு 39,013 பேர்களும், நிர்வாக ஒதுக்கீடு இடங்களுக்கு 29,007 பேர்களும் என மொத்தம் 68,020 பேர் விண்ணப்பித்துள்ளனர். பொதுப்பிரிவின்கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு நாளை கலந்தாய்வு தொடங்குகிறது. மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் ஆகிய சிறப்புப்பிரிவு இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான 3 சதவீத இடங்களுக்கு 53 பேர் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர்.'
விளையாட்டு வீரர்களுக்கு இட ஒதுக்கீட்டில் உள்ள 7 எம்பிபிஎஸ் மற்றும் 1 பிடிஎஸ் இடங்களுக்கு விளையாட்டு வீரர் தரவரிசைப்பட்டியலில் முதல் 40 பேரும், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 10 எம்பிபிஎஸ் மற்றும் 1 பிடிஎஸ் இடங்களுக்கு முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் பிரிவு தரவரிசைப்பட்டியலில் முதல் 30 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். கூடுதல் தகவல்களை மாணவர்கள் www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இணைதயளத்தில் குறிப்பிட்டப்பட்ட அசல் சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews