Breaking

Friday, July 12, 2019

அரசு மாதிரி பள்ளி சுவரில் மாணவ, மாணவிகளை கவர்ந்த வண்ண ஓவியங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூர் அரசு மாதிரி மேல் நிலைப்பள்ளி சுற்றுசுவரில் பள்ளி நிர்வாகம் பெயிண்ட் அடித்தது மட்டுமல்லாது பலவகையான ஓவியங்களை வரைந்து மாணவ, மாணவிகளை கவர்ந்துள்ளனர். தமிழகத்தில் தற்போது தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளும் போட்டி போட்டு வருகின்றன. இந்த வரிசையில் பெருங்களூர் மாதிரி மேல்நிலைப்பள்ளியும் இடம் பெறுகின்றன. பெருங்களூர் சுற்று வட்டாரத்திலிருந்து சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியின் நிர்வாகத்தினர் பள்ளிக்கு தற்போது புதிதாக பெயிண்ட் அடித்து பள்ளி சுற்றுசுவரில் மாணவ, மாணவிகளை கவரும் வகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அனிமேஷன் பொம்மைகள், இயற்கை காட்சிகள் என பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன. இது மாணவ, மாணவிகள் மட்டுமின்றி பெற்றோர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews

Search This Blog