கிண்டர் கார்டனாக மாறிய அரசு அங்கன்வாடி மையம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 23, 2019

கிண்டர் கார்டனாக மாறிய அரசு அங்கன்வாடி மையம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டைல்ஸ் தரை, குளிர்சாதன வசதி, எல்இடி டிவி என `கிண்டர் கார்டன்’ பள்ளிபோல அசத்தலாகக் காட்சியளிக்கிறது அந்த அரசு அங்கன்வாடி மையம். இந்த வியத்தகு மாற்றம் எங்கே? எப்படி? கோவை மாநகராட்சி 69-வது வார்டுக்கு உட்பட்ட புலியகுளம் பெரியார் நகரில், சுமார் 30 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில்தான் இந்த அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. இங்கு 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயின்று வந்தனர். இந்த நிலையில், ஆலயம் அறக்கட்டளையும், கே.சி.பி.
இன்ஜினீயர்ஸ் நிறுவனமும் இணைந்து, அவர்களது சமூகப் பொறுப்புணர்வுத் திட்டத்தில் இந்தக் கட்டிடத்தை சீரமைக்க முடிவு செய்தனர். ஏறத்தாழ ரூ.20 லட்சம் மதிப்பில், சர்வதேச தரத்தில், அனைத்து வசதிகளுடன் கூடிய கட்டிடமாக இதை மாற்றினர். முற்றிலும் டைல்ஸ் கற்களுடன் கூடிய தரை, குழந்தைகளுக்கான 5 நவீனக் கழிப்பிடங்கள், வாஷ்பேஷின்கள், கண்ணாடிகள், ஃபால்ஸ் சீலிங் செய்யப்பட்ட உட்புறக் கட்டிடத்தில் எல்இடி பல்புகள், 3 மின் விசிறிகள், இரண்டு ஏ.சி. இயந்திரங்கள், குழந்தைகள் அமர்ந்து படிப்பதற்கு டாய்ஸ் டேபிள், நாற்காலிகள் என தனியார் கிண்டர் கார்டன் பள்ளியைப் போல, அனைத்து வசதிகளும் செய்யப்பட்டன. அதுதவிர, சுவர்களில் பாடம் தொடர்பான ஓவியங்களும், தகவல்களும் வரையப்பட்டுள்ளன. சமையலறை மற்றும் ஸ்டோர் ரூம் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு குடிநீர் வழங்குவதற்காக குடிநீர் சுத்திகரிப்பு கருவியும் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி டிவி மூலமும் பாடம் நடத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட இந்த அங்கன்வாடி மையத்தை, சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி செயற் பொறியாளர் பார்வதி, முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் ஆர்.சந்திரசேகர், கே.சி.பி. இன்ஜினீயர்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் கே.சந்திரபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதுகுறித்து ஆலயம் அறக்கட்டளை நிறுவனர் ஆர்.சந்திரசேகர் கூறும்போது, “2002-ல் தொடங்கிய இந்த அறக்கட்டளை மூலம் ஆண்டுதோறும் 1200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறோம். பசுமை இந்தியா திட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு, பராமரித்து வருகிறோம். இரண்டு மாநகராட்சிப் பூங்காக்களையும் பராமரித்து வருகிறோம்” என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews