சுவாரசியமான உண்மைகளை தெரிஞ்சுக்கலாம் வாங்க! ஒருமுறை அப்துல் கலாம் மேடையில் பேசிக்கொண்டு இருக்கும் போது 'கரண்ட்' போய் விட்டது, அப்போது கலாம் என்ன செய்தார் தெரியுமா..? ஒரு முறை மதிற்சுவர்களில் கண்ணாடி பீங்கான்களைப் பொருத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார் அது ஏன் என்று தெரியுமா..? வாங்க தெரிஞ்சுக்கலாம்.
தனது பாதுகாப்பை நிராகரித்த கலாம்! ஏன் தெரியுமா? தனது பாதுகாப்பிற்காக அவர் தங்கி இருந்த வீட்டின் மதிற்சுவரில் கண்ணாடி பீங்கான்கள் பொறுத்துவதை நிராகரித்து விட்டார். ஏனெனில் கண்ணாடி பீங்கான்கள் பறவைகளைக் காயப்படுத்தக் கூடும் என்பதால் தனது பாதுகாப்பையும் பெரிதெனக் கருதாமல் நிராகரித்து விட்டார்..!
மாணவர்களுடன் கலாம் செய்தது என்ன தெரியுமா? மாணவர்கள் விடுத்த அழைப்பை ஏற்றுக் கொண்டு, அவர்களோடு நேரம் செலவிட்டது மட்டுமின்றி அவர்களின் யோசனைகளையும், கருத்துக்களையும் மிகவும் உன்னிப்பாகவும் கவனமாகவும் கேட்டறிந்தாராம் அப்துல் கலாம்..!
கலாம் சார் 'கரண்ட்' போய்விட்டது! ஒரு முறை மேடையில் அப்துல் கலாம் பேசிக் கொண்டிருக்கும் போது 'கரண்ட்' போய்விட்டது. உடனே யோசிக்காமல் மேடையிலிருந்து கீழே இறங்கி வந்து சுமார் 400 மாணவர்களுக்கு நடுவே நின்று, தன்னால் முடிந்த வரை அவரின் கனத்த குரலைக் கொண்டு உரையை தொடர்ந்தாராம் அப்துல் கலாம்..!
தனக்கென்று சேமிக்க தெரியாத மனிதர் காலம்! அப்துல் கலாம் அவர்கள், தன் வாழ்நாள் சேமிப்பு மற்றும் அவரின் சம்பளம் ஆகிய அனைத்தையும் 'பூரா (PURA)' என்ற ஒரு தொண்டு நிறுவனத்திற்குத் தொடர்ச்சியாக வழங்கி வந்திருக்கிறார். அவருக்கு என்று தனியாக எதுவும் சேமித்து வைத்ததில்லை நமது கலாம்...!
அனைவரையும் மதிக்க தெரிந்த மாமேதை கலாம்! தனக்கு வரும் அனைத்து வாழ்த்து மடல்கள், பரிசு மற்றும் கடிதங்களுக்கு அவரே தன் கைப்பட பதில் எழுதிய நன்றி கடிதத்தை அனுப்புவதை வழக்கமாய் கொண்டிருந்தார், மக்களின் குடியரசுத் தலைவர்..!
நமது நாயகன் கலாம்! ஒரு முறை பள்ளி நிகழ்ச்சி ஒன்றிற்குச் சென்றிருந்த கலாம், நிகழ்ச்சி ஆரம்பிக்க நேரம் ஆகிக் கொண்டே போன போதும், எல்லா குழந்தைகளுடனும் புகைப்படம் எடுத்துக் கொண்ட பின்னரே நிகழ்ச்சியை ஆரம்பிக்கச் சொன்னாராம் நமது நாயகன்.
நானும் சாதாரண மனிதன் என்று உணர்த்திய கலாம்! நிகழ்ச்சி ஒன்றிற்குச் சிறப்பு விருந்தினராக சென்றிருந்த கலாம் ஐயாவிற்கு, சிறப்பாக வடிவமைக்கப்பட்ட தன்னை விடப் பெரிய நாற்காலி ஒன்றில் அமர மறுத்துவிட்டாராம், நிகழ்ச்சி முடியும்வரை வேறொரு சாதாரண நாற்காலியில் தான் அமர்ந்தாராம் நமது எளிமை நாயகன் அப்துல் கலாம்..!
எதற்கும் அஞ்சாத ஏவுகணை மனிதன் குடியரசுத் தலைவராக இருக்கும் சமயத்தில் 'யாஹூ ஆன்சார்ஸ்' என்ற வலைத்தளத்தில், தீவிரவாதம் சார்ந்த கேள்வி ஒன்றைத் துணிவுடன் கேட்டிருக்கிறார் நமது ஏவுகணை மனிதன்..!
மாணவருடன் ஒரே தட்டில் சாப்பிட்ட கலாம்! கலிஃபோர்னியாவில் நடைபெற்ற மாநாடு ஒன்றில், இந்திய மாணவர் ஒருவரை தன் தட்டில் சாப்பிடும்படி சொன்னாராம் நமது அப்துல் கலாம்..! கலாமின் தட்டிலிருந்து ஒரு துண்டு கீரையை எடுத்து அந்த மாணவர் சாப்பிட்டாராம்..!
குடியரசுத் தலைவரின் விருந்தினர்கள் யார் தெரியுமா? கேரளாவின் ராஜ் பவனில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சிக்கு, குடியரசுத் தலைவரின் விருந்தினராக அப்துல் கலாம் இருவரை உடன் அழைத்துச் சென்றிருக்கிறார். அதில் ஒருவர் செருப்பு தைக்கும் தொழிலாளி மற்றும் மற்றொருவர் சிறிய ஓட்டல் ஒன்று வைத்து நடத்தும் ஓட்டல்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படங்களில் கூட பார்க்க முடியாத சில காரியங்களை நிஜ வாழ்க்கையில் செய்தவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர்.
15 புத்தகங்களை எழுதிய கலாம்! அணு இயற்பியல் தொடங்கி ஆன்மீக அனுபவம் வரை மொத்தம் 15 புத்தகங்களை எழுதி உள்ள அப்துல் கலாமைப் பற்றி 'ஐ யம் கலாம்' (I am kalam) என்ற ஒரு ஹிந்தி திரைப்படம் (2011) வெளியானது குறிப்பிடத்தக்கது..! இன்னும் இந்த திரைப்படத்தைப் பார்க்காவிட்டால் இன்று பார்த்துவிடுங்கள்.
மீண்டும் வேண்டும் ஒரு அப்துல் கலாம்..! இவரைப் போல் மாபெரும் நல்ல மனிதரைக் கண்டு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது இன்னும் பல கோடி விடயங்கள் உள்ளது. குழந்தைகள் முதல், இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கனவு காணக் கற்றுக்கொடுத்த கனவு நாயகன் அப்துல் கலாம் - கண்டிப்பாக மீண்டும் வேண்டும் ஒரு அப்துல் கலாம்..!