பள்ளி கட்டடம் கட்ட புறம் போக்கு நிலம் தி.மு.க., வலியுறுத்தல் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 02, 2019

பள்ளி கட்டடம் கட்ட புறம் போக்கு நிலம் தி.மு.க., வலியுறுத்தல்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''அரசு புறம்போக்கு நிலங்களை, பள்ளிகளுக்கு கட்டடம் கட்ட, அரசு ஒதுக்க வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., பிச்சாண்டி கோரிக்கை விடுத்தார். சட்டசபையில், கேள்வி நேரத்தில் நடந்த விவாதம்:அ.தி.மு.க., - பன்னீர்செல்வம்: கலசப்பாக்கம் தொகுதி, லாடவரம் ஊராட்சியில் உள்ள மேல்நிலைப் பள்ளிக்கு, புதிய கட்டடம் கட்ட, அரசு முன்வருமா?அமைச்சர் செங்கோட்டையன்: நடவடிக்கை எடுக்கப்படும். பன்னீர் செல்வம் : நடப்பு நிதியாண்டில் பணியை முடிக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: தமிழகத்தில், 'நபார்டு' வங்கி திட்டத்திலும், அனைவருக்கும் கல்வி திட்டத்திலும், பள்ளிகளுக்கு கட்டடங்கள் கட்டப்படுகின்றன.
உறுப்பினர் கேட்ட பள்ளிக்கு, இந்த ஆண்டு கட்டடம் கட்டப்படும்.தி.மு.க., - பிச்சாண்டி: பல கிராமங்களில், பள்ளிகளுக்கு நிலம் இல்லை. இதனால், கட்டடம் கட்ட நிதி ஒதுக்கியும், கட்ட முடியாத நிலை உள்ளது. எனவே, அந்த கிராமங்களில் உள்ள, அரசு புறம்போக்கு நிலங்களை, பள்ளிகளுக்கு ஒதுக்கி, தேவையான கட்டடங்கள் கட்ட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: முதல்வர் மற்றும் வருவாய்த் துறை அமைச்சருடன் பேசி, அரசு புறம்போக்கு நிலங்களை, பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்ற, நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து, எம்.எல்.ஏ.,க்களின் கருத்துகளையும் கேட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., - ரங்கநாதன்: வானகரம் ஊராட்சியில் உள்ள உயர்நிலைப் பள்ளியை, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியுள்ளனர். அங்கு, கூடுதல் கட்டடம் கட்ட வேண்டும்.அமைச்சர் செங்கோட்டையன்: நிதி நிலைமைக்கேற்ப, அரசு பரிசீலிக்கும்.தி.மு.க., - பொன்முடி: விழுப்புரம் மாவட்டம், சந்தப்பேட்டை பள்ளியில், உருது ஆசிரியர் இல்லை. தற்போது நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்: உருது ஆசிரியர்கள் குறைவாக உள்ளனர். ஆசிரியர் இருந்தால், பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக நியமிக்கலாம். அவர்களுக்கு மாத ஊதியமாக, 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இவ்வாறு, விவாதம் நடந்தது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews