👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு, தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம், கவுன்சிலிங் நடத்துகிறது. இந்தாண்டு, தொழிற்கல்வி, விளையாட்டு பிரிவினர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு, நேரடி ஒற்றைசாளர கவுன்சிலிங் நடத்தப்பட்டது.பொதுப்பிரிவு மாணவர்களுக்கு, ஆன்லைன் வாயிலாக கவுன்சிலிங் நடத்தப்பட்டது. ஜூலை, 3ல் துவங்கிய கவுன்சிலிங், நேற்றுடன் முடிந்தது. மொத்தம், 479 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 72 ஆயிரத்து, 940 இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. ஆன்லைன் கவுன்சிலிங் வழியாக, 76 ஆயிரத்து, 365 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
நேரடி ஒற்றை சாளர மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கில், 1,766 இடங்கள் நிரம்பியுள்ளன. மொத்தம், 78 ஆயிரத்து, 131 இடங்களே நிரம்பியுள்ளன. சேருவதற்கு மாணவர்கள் இன்றி, 94 ஆயிரத்து, 809 இடங்கள் காலியாக உள்ளன.இந்நிலையில், பிளஸ் 2 சிறப்பு துணை தேர்வில் பங்கேற்று, தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, துணை கவுன்சிலிங் நேற்று துவங்கியது. இதில் பங்கேற்க, 6,000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன் முடிவில், குறைந்தபட்சம், 5,000 இடங்கள் நிரம்பும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை தொடர்ந்து, 90 ஆயிரம் இடங்கள் மாணவர் சேர்க்கை இன்றி, இந்த ஆண்டு முழுவதும் காலியாக வாய்ப்புள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U