👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலையின், 28வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில், பல்கலை வேந்தர், மரியஸீனா ஜான்சன் தலைமையில், நேற்று நடந்தது. அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் சகஸ்ரபுதே, பட்டங்களை வழங்கினார்.இளநிலை இன்ஜினியரிங்கில், 2,541 பேர்; முதுநிலை இன்ஜினியரிங், 401; பல் மருத்துவம், 84; பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்பில், 112 பேர் என, 3,029 பேர் பட்டங்கள் பெற்றனர்.விழாவுக்கு பின், அனில் சகஸ்ரபுதே அளித்த பேட்டி:இன்ஜினியரிங் படிப்புக்கான தேர்வில், 30 சதவீத கேள்விகள் மட்டுமே, பாடத்தில் இருந்து கேட்கப்பட வேண்டும்.
மீதி, 70 சதவீதம், மாணவர்களின் அறிவாற்றல், ஆராய்ச்சி திறன், அணுகுமுறைகளை ஆய்வு செய்யும் வகையில் இருக்க வேண்டும்.சேர்க்கை குறைவுஇன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை, ஆண்டுக்கு, 50 ஆயிரம் இடங்கள் வீதம் குறைகிறது.
நான்கு ஆண்டுகளில்,மாணவர் சேர்க்கை, 2.5 லட்சம் குறைந்துள்ளது. ஆண்டுக்கு, 100 இன்ஜினியரிங் கல்லுாரிகள் மூடப்படும் நிலை உள்ளது. மாணவர் சேர்க்கை மற்றும் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். எனவே, இரண்டு ஆண்டுகளுக்கு புதிதாக, இன்ஜினியரிங் மற்றும் பார்மசி கல்லுாரிகள் துவங்க அனுமதி வழங்கப்படாது.இன்ஜினியரிங் படிப்பின் தரத்தை மேம்படுத்தும் வகையில், ஆண்டுக்கு இரண்டு முறை, நீட் நுழைவு தேர்வு நடத்துவது குறித்து, ஆலோசனை நடந்து வருகிறது.
மாநிலங்களில், சி.பி.எஸ்.இ.,க்கு இணையான பாடத் திட்டம் இல்லை. அனைத்து மாநிலங்களும், ஒரே பாடத் திட்டத்தை அமல்படுத்தும் வரை, இன்ஜினியரிங் படிப்புக்கு, நீட் தேர்வு நடத்த வாய்ப்பு இல்லை. எதிர்காலத்தில் நுழைவு தேர்வு நடத்த வாய்ப்பு உள்ளது.உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, மருத்துவ படிப்புக்கு, நீட் தேர்வு நடத்தப்படுகிறது. ஆனால், இன்ஜினியரிங் படிப்புக்கு அது போன்ற உத்தரவு இல்லை.
அதேபோல், அனைத்து கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கும், ஒருங்கிணைந்த ஒரே மாணவர் சேர்க்கை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தால், அந்த கல்லுாரிகளில், கலை, அறிவியல், கட்டடவியல், பார்மசி உள்ளிட்ட பிற படிப்புகளை நடத்தலாம். அதற்கு, ஏ.ஐ.சி.டி.இ.,யும், யு.ஜி.சி.,யும் அனுமதி அளிக்கும்.வட மாநிலங்களில், சில கல்லுாரிகள், இந்த அனுமதி பெற்றுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.டாக்டர் பட்டம்விழாவில், &'இஸ்ரோ&' இயக்குனர், உன்னிகிருஷ்ணன் நாயர், &'மங்கள்யான்&' திட்ட இயக்குனர், விஞ்ஞானி அருணன், இஸ்ரோ விஞ்ஞானி, உமா மகேஸ்வரன், மத்திய புவி அறிவியல் துறை செயலர், மாதவன் நாயர் ஆகியோருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. சத்யபாமா பல்கலை கல்வி குழும முன்னாள் வேந்தர், ரெமிபாய் ஜேப்பியார், பல்கலை தலைவர், மரிய ஜான்சன், துணை வேந்தர், சுந்தர் மனோகரன், பதிவாளர், ராவ் உட்பட பலர் பங்கேற்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U