டிஸ்கவரி சேனலில் 12ம் தேதி பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ஒளிபரப்பு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, July 30, 2019

டிஸ்கவரி சேனலில் 12ம் தேதி பிரதமர் மோடியின் நிகழ்ச்சி ஒளிபரப்பு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
டிஸ்கவரி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் மனிதனும் காடும் தொடரில் பிரதமர் மோடி பங்கேற்ற சிறப்பு நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி ஒளிபரப்பாகிறது. டிஸ்கவரி தொலைக்காட்சியில் மனிதனும் காடும் (மேன் வெர்சஸ் வைல்டு) என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. சுமார் 180 நாடுகளில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது . அடர்ந்த காடுகளில், வனவிலங்குகளை அதன் இருப்பிடத்திற்கே சென்று பின்ெதாடரும் இந்த நிகழ்ச்சியானது அனைவராலும் மிகவும் விரும்பி பார்க்கப்படும். இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரில்ஸ். அடர்ந்த காடுகளில் தன்னந்தனியே பயணம் செய்வது, மலைகளில் ஏறுவது, நீரோடைகளை கடப்பது என பியர் கிரில்ஸின் பல்வேறு சாகச பயணங்கள் இதில் ஒளிபரப்பப்படும். இதுமட்டுமின்றி இந்த நிகழ்ச்சி சுற்றுச்சூழல் மாறுபாட்டை வெளிச்சம்போட்டு காட்டும் முக்கிய நிகழ்ச்சியாகும்
. டிஸ்கவரி தொலைகாட்சியின் இந்த தொடரில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்று, தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் உடன் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்ட் 12ம் தேதி டிஸ்கவரியில் ஒளிபரப்பாக இருக்கிறது. இதுகுறித்து டிஸ்கவரி தொலைக்காட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாகச வீரர் பியர் கிரில்ஸ் மற்றும் இந்திய பிரதமர் மோடி இடம்பெற்றுள்ள சிறப்பு பகுதி இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டுள்ளது. இது ஒரு வெளிப்படையான மற்றும் சுதந்திரமான சாகச பயணமாகும். இந்த தொகுப்பு வனவிலங்கு பாதுகாப்பை வெளிகொணர்வதாக இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளது. இந்நிகழ்ச்சி தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் இயற்கையோடு இணைந்த காடுகளிலும் மலைகளிலும் பல ஆண்டுகள் வாழ்ந்துள்ளேன். அது எனது வாழ்க்கையில் மறக்க முடியாத நெடிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அரசியலுக்கு அப்பாற்பட்டு இயற்கையில் என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக இந்த சிறப்பு நிகழ்ச்சி குறித்து என்னிடம் கேட்கப்பட்டது. இயற்கையின் நடுவே நிகழும் இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பினேன். அதில் நான் ஆர்வமாக கலந்துகொண்டேன்.
இந்த நிகழ்ச்சியானது இந்தியாவின் வளமான சுற்றுச்சூழல் பாரம்பரியம், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் இயற்கையோடு இணக்கமாக வாழ்வதன் முக்கியத்துவம் உள்ளிட்டவை குறித்து உலகத்திற்கு உணர்த்துவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. மீண்டும் ஒரு முறை காட்டில் நேரத்தை செலவழித்தது மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது. இந்த முறை, அசைக்க முடியாத ஆற்றல் மற்றும் இயற்கையை அதன் தூய்மையான அனுபவதிற்கான தேடலால் ஆசிர்வதிக்கப்பட்ட பியர் கிரில்சுடன் இருந்தேன்” என்று தெரிவித்துள்ளார்.
நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரில்ஸ் கூறுகையில், “இதுபோன்ற சாகச பயணத்தில் பங்கேற்பதற்கு இந்திய பிரதமரை அழைத்து சென்றதை மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். குறிப்பிடத்தக்க உலக தலைவர் ஒருவருடன் நேரத்தை செலவழித்ததை மிகவும் பெருமையாக நினைக்கிறேன். நாம் ஒருவருக்கொருவர் தேவை என்பதையும், ஒற்றுமை தான் வலிமை என்பதையும் இந்த காடு நினைவூட்டுகிறது. இந்த நாட்டை வழிநடத்தும் பிரதமர் குறித்து அறிந்து கொள்வதற்கும், அவருடன் நேரத்தை செலவிடுவதற்கும் உற்சாகமாக இருந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews