ஜூலை 11ல் பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, July 07, 2019

ஜூலை 11ல் பி.இ., 2ம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பாலிடெக்னிக், பி.எஸ்சி., முடித்தவர்களுக்கு பி.இ., இரண்டாம் ஆண்டு நேரடி சேர்க்கை கவுன்சிலிங் காரைக்குடி அழகப்பா இன்ஜி.,கல்லுாரியில் வரும் 11ம் தேதி தொடங்கி 18-ம் தேதி வரை நடக்கிறது. கல்லுாரி முதல்வர் பன்னீர்செல்வம் கூறியதாவது: மே 17 முதல் ஜூன் 16 வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 10 ஆயிரத்து 520 பேர் விண்ணப்பித்தனர். உரிய ஆவணங்களுடன் இருந்த 9,627 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. பி.எஸ்சி., முடித்த 8 பேர் விண்ணப்பித்துள்ளனர். கவுன்சிலிங் 8 நாட்கள் நடக்கிறது. தினமும் 1500 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். 11ம் தேதி மாற்றுத்திறனாளிகள், லெதர், பிரிண்டிங், கெமிக்கல், டெக்ஸ்டைல் பிரிவுக்கும், ஜூலை 12, 13ம் தேதி காலை 9:30 மணி வரை சிவில், 13ம் தேதி காலை 9:30 மணி முதல் 15ம் தேதி மாலை 6:00 மணி வரை மெக்கானிக்கல், 16ம் தேதி காலை முதல் 18ம் தேதி மதியம் வரை எலக்ட்ரிக்கல், 18ம் தேதி மதியம் முதல் மாலை 6:00 மணி வரை பி.எஸ்சி., முடித்தவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
கவுன்சிலிங் துவங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வர வேண்டும். விளையாட்டு பிரிவு, மாற்று திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களுக்கான ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள், வர முடியாதவர்கள் பொதுப்பிரிவிலும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் கலந்து கொள்ளலாம். காலை 8:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை கவுன்சிலிங் நடக்கும்.மாணவர்கள் தங்களது ரேங்க் பட்டியல் மற்றும் தங்களுக்கான அமர்வு விபரங்களை இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
அழைப்பு கடிதத்தை www.accetlea.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மறுமதிப்பீடு மற்றும் சில காரணங்களால் மதிப்பெண் மாற்றம் இருப்பின் கொடுக்கப்பட்ட கட் -ஆப் மதிப்பெண் படி உரியதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே வந்து தகவல் தெரிவித்து விட்டு கலந்து கொள்ளலாம். அனைத்து அசல் சான்றிதழ்களும் கொண்டு வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு 04565 224 535, 230 801 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார். உடன் ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், இணை ஒருங்கிணைப்பாளர் சந்திரபிரபா இருந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews