லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? லேட்டஸ்ட் டிப்ஸ் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

லேப்டாப் சூடாவதை தடுப்பது எப்படி? லேட்டஸ்ட் டிப்ஸ்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
லேப்டாப் சூடாகுவதற்கு சுற்றுச்சூழலில் இருந்து சாப்ட்வேர் வரையில் பல்வேறு காரணங்கள் உள்ளன. அந்த வகையில், எளிய முறையில் லேப்டாப் சூடாவதை எப்படி தடுக்கலாம் என்பதை குறித்து இங்கு காணலாம். இப்போது உள்ள காலக்கட்டங்களில் கம்ப்யூட்டர் இல்லாமல் இருக்கவே முடியாது என்ற நிலை தான் உள்ளது. அந்த அளவுக்கு கணினியின் தேவைகள் அதிகரித்துள்ளது படிக்கும் மாணவர்களிடம் இருந்து, அலுவலகத்தில் வேலை பார்ப்போர் வரையிலும் லேப்டாப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு லேப்டாப் பயனாளர்கள் அன்றாடம் சந்திக்கும் ஒரு தொந்தரவு தான் லேப்டாப் சூடாகுதல். இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது.
அறை வெப்பநிலையில் தொடங்கி, லேப்டாப்பில் பயன்படுத்தப்படும் சாப்ட்வேர் வரையில் இதில் முக்கிய தொடர்பு உள்ளது. ஏசி அறையில் இருந்து லேப்டாப்பை பயன்படுத்தும் போது, சூடாகுதல் ஓரளவு கட்டுப்படுத்தப்படுகிறது. இருப்பினும் சூடாவதற்கு முக்கிய காரணங்களும், அவற்றை தடுப்பது எப்படி என்பது பற்றிய அடிப்படை காரணங்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். லேப்டாப் ஃபேன்: லேப்டாப் பயன்படுத்தும் போது அதன் Chip, IC, Circuit Board போன்றவைகளில் உருவாகும் வெப்பத்தை வெளியேற்றும் வகையில், சிறிய அளவிலான Motor Fan இயங்குகிறது. இந்த ஃபேன் லேப்டாப்பின் பக்கவாட்டில் அமைந்திருக்கும் இதில் சில நேரங்களில் தூசுக்கள் சேர்ந்து கொண்டு, வெப்பக்காற்று வெளியேறும் துளைகளை அடைத்துக் கொள்ளும். இதன் காரணமாக வெப்பம் வெளியேற முடியாமல், லேப்டாப் சூடாகிறது. எனவே, அடிக்கடி லேப்டாப்பை கழற்றி உள்ளே தூசுக்களை அகற்ற வேண்டும். இதற்கென laptop vacuum cleaner வாங்கி பயன்படுத்தலாம்.
லேப் டெஸ்க் (Lap Desk): லேப்டாப்பை அப்படியே மேசையில் வைத்து பயன்படுத்தும் போது, அதன் அடியில் காற்று போக வழியில்லாமல் இருக்கும். இதன் காரணமாகவும் லேப்டாப் சூடாகலாம். இதற்கு லேப்டாப் அடியில் காற்று சென்று வர வசதியாக, ஏதேனும் இரண்டு பொருட்களை வைத்து, அதன் மேல் லேப்டாப் வைத்து பயன்படுத்தலாம். லேப்டாப் கூலர் (laptop cooling pad): இதே போல், லேப்டாப் கூலிங் பேட் என பிரத்யேகமான கேட்ஜெட் ஆன்லைனிலும், கம்ப்யூட்டர் கடைகளிலும் கிடைக்கிறது. இது USB யிலிருந்து வரும் மின்சக்தி மூலமாக இயங்கும். இந்த ஃபேனை லேப்டாப் அடியில் வைத்தால் போதும். லேப்டாப்பின் உள்ளே உருவாகும் வெப்பக்காற்றை அப்படியே அடியின் வழியாக வெளியேற்றிவிடும்
சாப்ட்வேர்: ஒரே நேரத்தில் பல சாப்ட்வேர், அப்ளிகேஷன் ஓபனாக இருக்கும் போது, சூடு அதிகமாக இருக்கும். எனவே, அதிக மெமரி கொண்ட சாப்ட்வேர்களை முடிந்த வரையில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஒரு வேளை அவ்வாறு முக்கியமான சாப்ட்வேர், அதிக மெமரி கொண்டதாக இருந்தால், அதை பயன்படுத்தும் போது, மற்ற சாப்ட்வேர்களை பயன்படுத்தக்கூடாது சுற்றுச்சூழல்: முடிந்த வரையில் வெப்பம் குறைவாக இருக்கம் இடத்தில் இருந்து லேப்டாப்பை பயன்படுத்த வேண்டும். பகலில் நல்ல வெயில் அடிக்கும் போது, ஜன்னலுக்கு அருகில் வெயிலின் அனல் படும் வகையில் லேப்டாப் பயன்படுத்தக் கூடாது. எனவே, சுற்றுச்சூழலையும் கருத்தில் கொண்டு லேப்டாப் பயன்படுத்த வேண்டும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews