👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அரசு மருத்துவமனைகளின் காலியிடங்களுக்கு கலந்தாய்வு இல்லாமல் பணி நியமனம் செய்தால் முறைகேடு நடக்கும் என்று மருத்துவப் பட்டமேற்படிப்புகள் முடித்த அரசு டாக்டர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
கடந்த ஆண்டுவரை மருத்துவ பட்டமேற்படிப்புகளை முடித்தவர்களுக்கு கலந்தாய்வு மூலம் காலிபணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் பணி நியமனம் நடைபெறாது. தேவையான காலிபணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டு தகவல் தெரிவிக்கப்படும் என்று சுகாதாரத் துறை தெரிவித்தது. இதனால், மருத்துவ பட்டமேற்படிப்புகளை முடித்து கலந்தாய்வுக்காகக் காத்திருந்த அரசு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து, அரசு டாக்டர்கள் கலந்தாய்வு மூலம் மட்டுமே பணி நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கடந்த சில நாட்களாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக அரசு டாக்டர்களிடம் கேட்டபோது, “கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யப்படாது. நாங்களே தேவையான இடங்களில் நியமனம் செய்து கொள்கிறோம் என்று கூறுவது என்ன நியாயம். இந்த நடைமுறை முறைகேட்டுக்குதான் வழிவகுக்கும். எங்களுக்கு எந்த ஊரில் பணி வழங்கப்பட்டாலும், நாங்கள் அங்கு சென்று பணியாற்றத் தயாராக இருக்கிறோம். டாக்டர்கள் கோரிக்கைகளுக்காக போராடினால் ஏழை நோயாளிகள் பாதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர். எங்களுக்கு நடக்கும் இதுபோன்ற அநீதியைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை” என்றனர்.
சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “எம்பிபிஎஸ் முடித்துவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் டாக்டர்கள், மருத்துவ பட்டமேற்படிப்புகள் படிக்கின்றனர். சலுகை மதிப்பெண்களுக்காக கிராமப்புறங்களில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றுகின்றனர். இதனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பற்றாக்குறை இல்லை. மாவட்ட தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகளில் பணியாற்ற யாரும் வருவதில்லை. இதனால், டாக்டர்கள் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதனால்தான், மருத்துவ பட்டமேற்படிப்புகள் முடித்த சுமார் 600 அரசு டாக்டர்களுக்கு இந்த ஆண்டு கலந்தாய்வு மூலம் பணி நியமனம் செய்யாமல், மாவட்ட தலைமை மற்றும் தாலுகா மருத்துவமனைகளில் பணி நியமனம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U