👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புக்கில் இடம்பிடித்து சாதனை படைத்ததுள்ளார். நுண்கலை என்று சொல்லக் கூடிய மைக்ரோ ஆர்ட் பிரிவின் கீழ் தமிழ் மொழிக்காக இவர் செய்த முயற்சிக்கு உலக சாதனை விருது கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை படைக்க லோக்கேஷ் தீட்டிய திட்டம்
சென்னை ஜேப்பியார் எஸ்.ஆர்.ஆர் கல்லூரியில் இறுதியாண்டு படுத்து வரும் இவர், தமிழ் மொழியின்மீது கொண்ட பேரன்பினால் தமிழுக்காக ஏதேனும் சாதனை செய்ய வேண்டும் என்ற லட்சியத்துடன் இருந்திருக்கிறார். இதன் முயற்சியாக இவருக்குத் தெரிந்த மைக்ரோ ஆர்ட்ஸ் கலையைத் தேர்ந்தெடுத்து அதில் சாதனை படைக்கத் திட்டமிட்டிருந்தார்.
தமிழ் மொழிக்கு பெருமை
தமிழ்ப் படங்கள் மற்றும் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ்களில் மட்டுமே மக்கள் தமிழ் என் மூச்சு என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால் இறுதியில் அனைவரும் ஆங்கிலத்திற்கே முக்கியத்துவம் தருகின்றனர். தமிழ் மொழிக்காகத், தமிழ் மொழியை பயன்படுத்தி தமிழில் சாதனை செய்து சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்ததாக லோக்கேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழில் மைக்ரோ ஆர்ட்ஸ் ஆங்கிலம் தேவை தான், இருப்பினும் தமிழை மறக்க வேண்டாம், தமிழ் மொழியிலும் சாதிக்கலாம் என்பதை உணர்த்தும் விதமாகத் தமிழ் எழுத்துக்களைச் செதுக்கும் முயற்சியில் இறங்கி இருக்கிறார் லோகேஷ். பென்சில் ஊக்கில் மைக்ரோ தமிழ் எழுத்துக்களைச் செதுக்கத் துவங்கி, தற்பொழுது அதில் சாதனையும் படைத்துள்ளார். 40 மணிநேரத்தில் எத்தனை எழுத்துக்களை செதுக்கினார் தெரியுமா?
பென்சில் ஊக்கில் 40 மணிநேரத்தில் சுமார் 247 தமிழ் மைக்ரோ எழுத்துக்களை மைக்ரோ ஆர்ட் முறைப்படி செதுக்கி, கலாம் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு புக்கில் தனது பெயரையும் சேர்த்து தமிழர்களுக்குப் பெருமை சேர்த்துள்ளார். வரவிருக்கும் காலத்தில் இன்னும் பல சாதனைகள் தமிழ்ச் சமூகத்திற்காகச் செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் லோக்கேஷ் தெரிவித்திருக்கிறார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U