👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

மத்திய வருமான வரித்துறை புதிதாக மத்திய சரிபார்ப்பு மையத்தை (சென்விசி) உருவாக்கியுள்ளது. இதன்படி வரி செலுத்தும் அளவுக்கு வருமானம் ஈட்டுவோர், வரி தாக்கல் செய்வது இல்லை. இத்தகையோர் குறித்த விவரங்கள் தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வருமான வரி விவரங்களை தாக்கல் செய்யாத 11 லட்சம் பேருக்கு நோட்டீஸ்களை அனுப்ப வருமான வரித்துறை முடிவு செய்துள்ளது.
வருமான வரி சட்டம் 133 சி பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட உள்ளதாக வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். முதல் கட்டமாக பண பரிவர்த்தனை மேற்கொண்டு அதற்குரிய வரி தாக்கலை தாக்கல் செய்யாதவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெருமளவிலானவர்கள் பண மதிப்பு நீக்க நடவடிக்கையின்போது பண பரிவர்த்தனை மேற்கொண்டவர்களாவர்.
இவ்விதம் அனுப்பப்படும் நோட்டீஸுக்கு பதில் வராவிடில், இதுகுறித்த விவரம் வருமான வரித்துறையின் பரிசீலனைக் குழுவுக்கு அனுப்பப்படும். அந்த வகையில் நோட்டீஸ் அனுப்பப்பட்டதில் 70 ஆயிரம் பேர் வரி தாக்கல் செய்துள்ளனர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சென்விசி பிரிவானது வரி தாக்கல் செய்த அனைத்து வருமான வரி செலுத்துவோரின் விண்ணப்பங்களை பரிசீலிக்கிறது.
மொத்தம் வரி தாக்கல் செய்த 6.44 கோடி பேரின் வரி தாக்கல் படிவங்களும் இந்த மையத்தில்தான் பரிசீலனை செய்யப்படுகிறது. வரிதாக்கல் படிவத்தில் வங்கி சேமிப்பு, பரஸ்பர நிதி முதலீடு, சொத்து பரிவர்த்தனை விவரம் உள்ளிட்டவற்றை தெரிவிக்காவிடில் உங்களுக்கு விரைவிலேயே நோட்டீஸ் நிச்சயம் வரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். தாக்கல் செய்தவர்களில் 50 லட்சம் முதல் 60 லட்சம் பேரின் படிவங்கள் மீண்டும் பரிசீலிக்கப்படும் என்று தெரிகிறது.
தாக்கல் செய்தவர்களின் மனுக்கள் 200 வகையான நிபந்தனைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றன. இவற்றில் சிக்காத மனுக்கள் மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தப்படுகின்றன. 2017-18-ம் ஆண்டு மற்றும் 2016-17-ம் நிதி ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி படிவங்கள் இப்போது பரிசீலிக்கப்படுகின்றன. தாக்கல் செய்யப்படும் அனைத்து படிவங்களையும் (100 சதவீதம்) பரிசீலிக்கும் திறன் பெற்றதாக இந்த மையம் உள்ளது. இதற்கு முன்பு தாக்கல் செய்யப்படும் அனைத்து படிவங்களையும் பரிசீலனை செய்யும் வசதி இல்லை. மொத்தம் தாக்கல் செய்யப்படும் படிவங்களில் 0.5 சதவீத படிவங்களே பரிசீலிக்கப்படும்.
இதனால் வரி செலுத்த வேண்டியவர்கள்கூட தப்பித்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இந்த மையம் மூலம் இ-மெயிலில் நோட்டீஸ்கள் அனுப்பப்படும். அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு 10 நாட்களுக்குள் பதில் அனுப்ப வேண்டும். இந்த நடைமுறையானது முழுக்க முழுக்க எவ்வித மனிதக் குறுக்கீடும் இன்றி நடைபெறும். அதாவது வரி மதிப்பீடு செய்யும் அதிகாரி, வரி செலுத்துவோர் ஆகியோருடனான உரையாடல் மனித குறுக்கீடுகள் இன்றி நடைபெறும்.
கேட்கப்படும் கேள்விகள் மற்றும் அதற்கு அளிக்கப்படும் பதில்கள் அனைத்தும் இயந்திரமே புரிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டவையாகும். அளிக்கும் பதில் திருப்திகரமாக இல்லாவிடில், அடுத்தகட்டமாக சில கேள்விகள் கேட்கப்படும். நோட்டீஸ் பெற்ற வரி செலுத்துவோர், அவரது விண்ணப்பம் அதிகாரியின் பரிசீலனைக்கு செல்லும் முன்பாக மற்றொரு வாய்ப்பாக இரண்டாவது தொகுப்பு கேள்வி இடம்பெறும்.
அதேசமயம், வரி செலுத்துவோரின் பதில் திருப்திகரமாக இருந்தால் அத்துடன் அந்த பிரச்சினை முடித்துவைக்கப்படும். கூடுதலாக எவ்வித தொந்தரவும் இருக்காது. இதுவரை 3.17 லட்சம் பேரின் மனுக்கள் மறு பரிசீலனைக்காக அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்த மையம் உருவாக்கப்பட்ட பிறகு மேலும் கூடுதலாக பரிசீலனைக்கான மனுக்கள் வரும் என்று தெரிகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U