அதிகமாக அரிசியினை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள்..!! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

அதிகமாக அரிசியினை உணவில் சேர்த்துக்கொள்வதால் ஏற்படும் தீமைகள்..!!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
1.உடல் எடை அதிகரிக்கும் அரிசியில் மற்ற தானியங்கள் மற்றும் சிறு தானியங்களை காட்டிலும் அதிக அளவில் கலோரிகள் நிறைந்துள்ளது. இதனை நீங்கள் அதிக அளவில் எடுத்துக்கொள்ளும்போது தேவையற்ற கலோரிகள் உடலில் கொழுப்பாக சேர்கின்றது. 2. சர்க்கரை வியாதி அரிசியானது அதிக அளவு கிளைசெமிக் இண்டெக்ஸ் உடையது. மற்றும் இதில் கோதுமை, ராகி, தினை, கம்பு, வரகு போன்ற தானியங்களை காட்டிலும் குறைந்த அளவு நார்சத்து உள்ளது. அதனால் உங்கள் உடலில் மாவுச்சத்தானது அதிக அளவில் சேர்ந்து இரத்த சர்க்கரையின் அளவினை அதிகரிக்கும். இதன் விளைவே சர்க்கரை வியாதி ஆகும்.
3. இருதய கோளாறு அரிசியினை நாம் உண்டு வரும்போது எரிக்கப்படாத கலோரிகள் நமது உடலில் கொழுப்பாக சேர்கின்றன. அவ்வாறு சேரும் கொழுப்பானது இருதய இரத்த நாளங்களில் சேர்கின்றது. இதன் விளைவாக உங்களுக்கு இரத்த அழுத்தம், இருதய கோளாறு, போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. 4. குறைவான நார்சத்து தோல் நீக்கப்பட்ட வெள்ளை அரிசியில் குறைந்த அளவே நார்ச்சத்து உள்ளது. நமது செரிமான ஆரோக்கியத்திற்கும், குடல் ஆரோக்கியத்திற்கும் மற்றும் மலச்சிக்கலை தடுக்கவும் நார்ச்சத்து மிக மிக முக்கியம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews