கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் இந்தி கட்டாயம் இல்லை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, June 05, 2019

கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் இந்தி கட்டாயம் இல்லை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
'பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் இந்தியை கட்டாயம் படிக்க வேண்டும்' என தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் கூறப்பட்டதற்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதையடுத்து, தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் திருத்தம் செய்துள்ள மத்திய அரசு, 'இந்தி கட்டாயம் இல்லை' என அறிவித்துள்ளது. 'தேசிய கல்விக் கொள்கை' கடந்த 1986ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. பின்னர், அது 1992ம் ஆண்டு திருத்தப்பட்டது. அதுவே, தற்போது வரை நடைமுறையில் உள்ளது.
'புதிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படும்' என மத்திய அரசு கடந்த 2014ம் ஆண்டே அறிவித்தது. இதற்காக, இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் தலைமையில 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைத்தது. நீண்ட கால தாமதத்துக்குப் பின், அந்த குழு தனது வரைவு அறிக்கையை மத்திய அரசிடம் சமீபத்தில் சமர்ப்பித்தது. அந்த புதிய வரைவு கொள்கையை, புதிதாக பொறுப்பேற்ற மத்திய மனித வளம் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வெளியிட்டார். இந்த வரைவு திட்டம் குறித்து இம்மாதம் 30ம் தேதி வரை மக்கள் தங்கள் கருத்துக்கள், ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என கூறினார். அந்த வரைவு கொள்கையில், 'மும்மொழி கொள்கை என்பது கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்தி பேசாத மாநிலங்களில், அந்த மாநில தாய் மொழி, ஆங்கிலம் ஆகியவற்றோடு இந்தி மொழியை கற்பிக்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களில், ஆங்கிலத்துடன், இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்றை கற்க வேண்டும். இந்த நடைமுறையை ஆறாம் வகுப்பில் இருந்து தொடங்க வேண்டும்' என கூறப்பட்டு இருந்தது.
இந்த திட்டத்துக்கு தமிழகம் உட்பட தென் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தின. இந்தி திணிக்கப்பட்டால் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்தன. கர்நாடக முன்னாள் முதல்வர் சித்தராமையா டிவிட்டரில் வெளியிட்ட பதிவில், 'புதிய தேசிய கல்வி கொள்கை, கர்நாடக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும், இந்தி மொழியை திணிக்க முயற்சிப்பதாகவும் உள்ளது. இதற்கு பதில் பிராந்திய அடையாளத்தை அங்கீகரிப்பதில் கவனம் செலுத்தலாம். நாங்கள் கன்னடர்களாக இந்தியாவில் இருப்போம்' என்றார். இதேபோல், கேரளாவில் புதிய தேசிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரேவும், புதிய கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, 'இது வரைவு கொள்கைத்தான். இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இந்திய மொழிகளை முன்னேற்றுவதுதான் மத்திய அரசின் நோக்கம். எந்த மொழியையும் திணிப்பது நோக்கம் அல்ல,' என் மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கூறினர். .
இந்நிலையில், எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து, மத்திய அரசு நேற்று பணிந்தது. தேசிய கல்வி கொள்கை வரைவு திருத்தப்பட்டு நேற்று மீண்டும் வெளியிடப்பட்டது. அதில், இந்தி கட்டாயம் என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டுள்ளது. 'வாரிய தேர்வுகளில் ஒவ்வொரு மொழியின் அடிப்படை புலமை சோதிக்கப்படும். அதனால், 6ம் வகுப்பு முதல் மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழியை ஆசிரியர்கள் மற்றும் பள்ளியின் ஆதரவுடன் தேர்வு செய்து கொள்ளலாம்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 'இந்தி கட்டாயம் இல்லை' என்று மட்டுமே மாற்றியமைக்கப்பட்ட கல்வி கொள்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், மும்மொழி திட்டத்தை முழுமையாக கைவிடுவதாக அதில் கூறப்படவில்லை. எனவே, தமிழக மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது இந்திய மொழியை தேர்வு செய்து படிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
* இந்தி கட்டாயம் என்ற பிரிவு மட்டும் நீக்கப்பட்டுள்ளது. * மும்மொழி திட்டத்தை முழுமையாக கைவிடுவதாக கூறப்படவில்லை. * தமிழக மாணவர்கள் தமிழ், ஆங்கிலம் தவிர வேறு ஏதாவது இந்திய மொழியை படிக்க வேண்டியது கட்டாயம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews