மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, June 07, 2019

மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
click here to watch the full video எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஆன்லைனில் தொடங்கியுள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புக்கான விண்ணப்பங்களை www.tnhealth.org மற்றும் www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்கள் வாயிலாக பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்பங்களை பதிவிறக்க வரும் 20-ஆம் தேதி கடைசி நாளாகும். நிரப்பிய விண்ணப்பங்களை ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். ஆன்லைனில் சமர்ப்பிப்பதாக இருந்தால் 20ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அல்லது THE SECRETARY, SELECTION COMMITTEE, 162, PERIYAR E.V.R. HIGH ROAD, KILPAUK, CHENNAI – 600 010 என்ற முகவரியில், 21ஆம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தரவரிசைப் பட்டியல் ஜூலை 2ம் தேதி வெளியிடப்படுகிறது. ஜூலை முதல் வாரத்தில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கும். சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 4ஆம் தேதி நடைபெறும். முதல்கட்ட கலந்தாய்வு ஜூலை 5ஆம் தேதி தொடங்கி, ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து ஜூலை 12ஆம் தேதி வரை நடைபெறும். மாணவர் சேர்க்கையை முடித்து, படிப்புகளை ஆகஸ்ட் 1ஆம் தேதி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
www.tnhealth.org, www.tnmedicalselection.org ஆகிய இணைய தளங்களில் இருந்து எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை மாணவர்கள் பதிவிறக்குவதற்காக மருத்துவக் கல்வி இயக்ககம் சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளது. தமிழகத்தில் உள்ள 23 அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனைகளில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்காக, சிறப்பு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுதவிர மருத்துவ கல்லூரி மருத்துவமனை இல்லாத மாவட்டங்களில், அந்தந்த பகுதியில் உள்ள பொறியியல் கல்லூரியில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரே சமயத்தில் தமிழகம் முழுவதும் 5 ஆயிரம் விண்ணப்பங்களை பதிவு செய்யும் வகையில் தொழில்நுட்பம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோல, தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு, அதிக அளவில் பணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தால், அது தொடர்பாக புகார் அளிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பாலசுப்பிரமணியம் தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. www.tnmedicalselection.org மற்றும் www.tnhealth.org இணைய தளங்கள் மூலமே, பெற்றோர் மற்றும் மாணவர்கள் இது தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews