👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
click here to watch the full video
தமிழகம் முழுவதும் பொறியியல் கலந்தாய்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி தொடங்கியுள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கு 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில் கடந்த 3-ஆம் தேதி ரேண்டம் எண்கள் வெளியிட்டன. விண்ணப்பித்தல், கலந்தாய்வு உள்ளிட்டவை ஆன்லைனில் நடைபெறும் நிலையில், சான்றிதழ் சரிபார்ப்பு மட்டும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சேவை மையங்களில் நடைபெற்று வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள 45 மையங்களில் இன்று முதல் வரும் 12-ஆம் தேதி வரை சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
சென்னையில் தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி, பிர்லா கோளரங்கம், அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி நடைபெற்று வருகிறது. பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பித்த போது மாணவர்கள் சமர்ப்பித்திருந்த மதிப்பெண் சான்றிதழ்கள், சாதிச்சான்றிதழ், வருமானவரிச்சான்று, இருப்பிடச்சான்று, முதல் பட்டதாரி சான்று, சிறப்புத்தகுதி உடையவர் என்றால் அதற்கான சான்று ஆகியவற்றின் உண்மைத் தன்மை சரிபார்க்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பிறகு ஆன்லைன் கலந்தாய்வில் கலந்து கொள்வது எப்படி கல்லூரிகளை தேர்வு செய்வது எப்படி என்ற விளக்கங்கள் மாணவர்களுக்கு திரையிட்டு காட்டப்படுகின்றன. பின்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் கையேட்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளின் முழுவிவரங்கள் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.
அதனைப் பயன்படுத்தி மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்கலாம் ஜூன் 17-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட உள்ள நிலையில் 20-ஆம் தேதி கலந்தாய்வு தொடங்குகிறது. ஜூலை 3 முதல் 28-ஆம் தேதி வரை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U