👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
விடுமுறை முடிந்து வகுப்பு துவங்கும் போது.. பள்ளிகள் பளிச்சிடணும்! பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் போது, பள்ளி வளாகம் துாய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்,' எனதலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், வடக்கு, தெற்கு ஒன்றியங்களில், 195 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் செயல்படுகின்றன. மேலும், 100க்கும் மேற்பட்ட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளும் செயல்படுகின்றன.முழு ஆண்டுத்தேர்வு முடிந்ததும் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் வரும் ஜூன், 3ம் தேதி திறக்கப்படுகிறது.இதனையடுத்து, பள்ளி திறப்பின் போது, பள்ளி வளாகம் துாய்மையாகவும், பாதுகாப்பாகவும் இருக்க பள்ளி கல்வித்துறை, முதன்மை கல்வி அலுவலர்களிடம் தெரிவித்துள்ளது.முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மூலமாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கல்வி துறை அதிகாரிகள் கூறியதாவது:
வரும் ஜூன், 3ம் தேதி அனைத்து தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் திறக்கப்படுகிறது. பள்ளி திறப்பதற்கு முன்தினம், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் பள்ளிக்கு சென்று, பள்ளி வளாகம், வகுப்பறைகள் துாய்மையாக உள்ளதா என்றும்; அனைத்து பள்ளிகளிலும் உள்ள தண்ணீர்வசதியுடன் கூடிய கழிப்பிடம் பயன்பாட்டில் உள்ளதையும் உறுதி செய்ய வேண்டும்.கழிப்பிடங்களில் ஏதேனும் பழுதுகள் இருந்தால், அதனை சரி செய்து, மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி திறக்கும் நாளில், மாணவர்கள் வருகை புரியும் போது அவர்களை அன்புடன் வரவேற்று, நல்லதொரு கற்றல் சூழலை உருவாக்கித்தருவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.மாணவர்களுக்கு பாட புத்தகம், சீருடைகள், நோட்டுப்புத்தகள் அனைத்தும் பள்ளி திறக்கும் நாளன்று மாணவர்களுக்கு வழங்க வேண்டும். பஸ் பாஸ் தேவைப்படும் மாணவர்கள், காலதாமதமின்றி பெறுவதற்கு போக்குவரத்து அலுவலர்களை தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
குடிநீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளை கிருமிநாசினி பயன்படுத்தி துாய்மையாகவும், மாணவர்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.காற்றோட்டமான சூழ்நிலையை உருவாக்கித்தரும் பொருட்டு வகுப்பறைகளில் பழுதடைந்துள்ள மின்விசிறி,மின்விளக்கு மற்றும் மின் இணைப்புகளை சீரமைத்து, பயன்படுத்தும் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பள்ளி வளாகத்தில் திறந்தவெளிக்கிணறுகள், உயர்மின் அழுத்த மின்கம்பிகள், மின்கசிவுகள், பழுதடைந்த கட்டடங்கள், குழிகள் போன்றவை இருந்தால் அவற்றை சரி செய்ய வேண்டும்.இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.மொபைல்போனுக்கு தடை!உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் காலை, 9:15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும். பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது.
மொபைல்போன்களை பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது, என, பள்ளி தலைமையாசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு அறிவுறுத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.'
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U