👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து கடந்த 3-ம் தேதி அனைத்து வித பள்ளிகளும் திறக்கப்பட்டன.
நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பணிகள் மே மாதமே முடிக்கப்பட்டன. பள்ளிகளில் கூடுதலாக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது. எனினும், பெரும்பாலான தனியார் பள்ளிகளில் மாணவர்களிடம் நன்கொடை மற்றும் முன்பணம் என்றபெயரில் கட்டணங்கள் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. மேலும், அரசு உதவி பெறும்பள்ளிகளிலும் நிர்ணயிக்கப்பட்டதைவிடக் கூடுதல் கட்டணம் கேட்பதாகக் குற்றச்சாட்டுகள் வருகின்றன. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை மீண்டும் எச்சரித்துள்ளது.
சுற்றறிக்கை இது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கல்விக் கட்டணம் வசூலிப்பது குறித்து தமிழகஅரசுவிதிகளை வகுத்துள்ளது. அதைத்தவிர வேறு எந்தப் பெயரிலும் கூடுதலாகக் கட்டணம் வசூலிக்கக்கூடாது.அவ்வாறு வசூலிக்கும் பள்ளிகள் குறித்து தகவலோ, புகாரோ வந்தால் அப்பள்ளியின் தலைமையாசிரியர் மீது முதன்மைக் கல்வி அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். பெற்றோர் புகார் அளிக்கலாம்மேலும், தனியார் பள்ளிகளுக்கான கட்டணத்தை கல்விக் கட்டணக்குழு நிர்ணயம் செய்துள்ளது.
அந்தக் கட்டணத்தை மட்டுமே அப்பள்ளிகள் வசூலிக்க வேண்டும்.அதேபோல், இலவச கட்டாயக்கல்வி மற்றும் உரிமைச் சட்டத்தின்படி 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு அரசே கல்விக்கட்டணம் செலுத்தும். எனவே, அவர்களிடம் எவ்விதக் கட்டணமும் பெறக்கூடாது. முறைகேடு செய்யும் பள்ளிகள் மீது பெற்றோர் புகார் அளிக்கலாம்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U