நீங்களும் சி.ஏ., ஆகலாம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, June 29, 2019

நீங்களும் சி.ஏ., ஆகலாம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திலும், தனிநபருக்கு மட்டுமின்றி, சிறியது முதல் மிகப்பெரியது வரையிலான தொழில் நிறுவனங்கள் அனைத்திலும் தொழில்முறை கணக்கியலாளர்களின் பங்கு நிச்சயம் உண்டு. வணிகவியல் சார்ந்த பணிகளில் உயரிய படிப்பான, 'சார்ட்டர்டு அக்கவுண்டன்ட்சி' சமூகத்தில் மதிப்பு மிகுந்த துறைகளில் ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.சி.ஏ., படிப்புஉலகநாடுகள் ஒவ்வொன்றிலும், வேறுபட்ட பெயர்களைக் கொண்ட கல்வி நிறுவனங்கள், சி.ஏ., விற்கு இணையான படிப்புகளை வழங்குகின்றன. இந்தியாவைப் பொருத்தவரை, இந்திய பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட சிறப்பு சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்டு அக்கவுண்டன்ட் ஆப் இந்தியா எனும் அமைப்பால் மட்டுமே சி.ஏ., படிப்பிற்கான தேர்வுகளை நடத்தி, சான்று வழங்க முடியும்.படிப்பு நிலைகள் மற்றும் தகுதிகள்:சி.ஏ., படிப்பில் பவுண்டேஷன், இண்டர்மீடியட், பைனல் ஆகிய மூன்று நிலைகள் உள்ளன. இவற்றில், துவக்க நிலையான 'பவுண்டேஷன் கோர்ஸ்'ல் சேர பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30 அல்லது டிசம்பர் 31 ஆகிய தேதிகளுக்குள் பதிவு செய்துகொள்ளலாம். பதிவு செய்தவர்கள் நவம்பர் அல்லது மே மாதம் நடைபெறும் பவுண்டேஷன் தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும். அதன்பிறகு, பி.ஓ.எஸ்., எனும் போர்டு ஆப் ஸ்டடீஸ் மூலமாக, இன்டர்மீடியட் படிப்பிற்காக பதிவு செய்ய வேண்டும்.
இவர்கள் 8 மாத கல்வி காலத்தை நிறைவு செய்த பிறகு, இன்டர்மீடியட் நிலையில் உள்ள இரண்டு பிரிவுகளிலோ அல்லது ஒரு பிரிவுலோ தேர்ச்சி பெற வேண்டும்.'இன்டர்மீடியட்' நிலைஅவர்கள், இன்டர்மீடியட் படிப்பிற்கு பதிவு செய்த பின், நான்கு வார கால &'இன்டெக்ரேட்டட் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் சாப்ட் ஸ்கில்ஸ்' ( ஐ.சி.ஐ.டி.எஸ்.எஸ்.,) படிப்பை நிறைவு செய்யவேண்டியதும் அவசியம். அதன்பிறகு, மூன்று ஆண்டுகள் கொண்ட செயல்முறை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். இன்டர்மீடியட் படிப்பில் உள்ள இரண்டு பிரிவு தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி நிலையான 'பைனல்' தேர்வை எழுதலாம். ஆனால், கடைசி இரண்டு ஆண்டு செயல்முறை பயிற்சியின் போதே, நான்கு மாதங்கள் கொண்ட &'அட்வான்ஸ்ட் இன்டெக்ரேட்டர்ட் கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்' (ஏ.ஐ.சி.ஐ.டி.எஸ்.எஸ்.,) படிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்திருப்பதும் அவசியம்.'பைனல்' நிலைசெயல்முறை பயிற்சியின் கடைசி 6 மாதங்களில் இறுதி தேர்வை எழுதலாம்.
செயல்முறை பயிற்சியை நிறைவு செய்து, இறுதி நிலையில் உள்ள இரண்டு பிரிவிலும் தேர்ச்சி பெற்றுவர்கள் ஐ.சி.ஏ.ஐ., அமைப்பில் உறுப்பினராக பதிவு செய்து சி.ஏ., அந்தஸ்தை பெறலாம்.பட்டம் பெற்றவர்கள்தகுதிகள் மற்றும் படிப்பு நிலைகள்: பட்டம் பெற்றவர்கள் பவுண்டேஷன் கோர்ஸ் சேர வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாக &'இன்டர்மீடியட்' நிலையில் சேர முடியும். அதற்கு, வணிகவியலில் இளநிலை அல்லது முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தது 55 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர துறையில் பட்டம் பெற்றவர்கள் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செக்ட்ரட்டரிஸ் ஆப் இந்தியா அல்லது இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட் அக்கவுண்ட்ஸ் ஆப் இந்தியாவில் இன்டர்மீடியட் நிலையில் தேர்ச்சி பெற்றவர்களும் நேரடியாக இன்டர்மீடியட் நிலைக்கு பதிவு செய்யலாம்.பதிவு செய்த பிறகு, நேரடியாக நான்கு வார கால &'இன்டெக்ரேட்டர்டு கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்' (ஐ.சி.ஐ.டி.எஸ்.எஸ்.,) படிப்பில் சேர்ந்து பயிற்சி பெறவேண்டும். உடன், மூன்று ஆண்டுகால செயல்முறை பயிற்சியை தொடர வேண்டும். ஒன்பது மாத கால செயல்முறை பயிற்சியை நிறைவு செய்த உடன் &'இன்டர்மீடியட்' தேர்வை எழுத வேண்டும். அதில் உள்ள இரண்டு பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்ற பிறகு, இறுதி நிலைக்கு பதிவு செய்ய வேண்டும்.பிறகு, &'அட்வான்ஸ்டு இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் மேனேஜ்மெண்ட் கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்' பாடத்தை உள்ளடக்கிய நான்கு மாத கால &'அட்வான்ஸ்டு இன்டெக்ரேட்டர்டு கோர்ஸ் ஆன் இன்பர்மேஷன் டெக்னாலஜி அண்ட் சாப்ட் ஸ்கில்ஸ்' (ஏ.ஐ.சி.ஐ.டி.எஸ்.எஸ்.,) படிப்பையும் தொடர வேண்டும்.
இதனை செயல்முறை பயிற்சியின் கடைசி இரண்டு ஆண்டுகளுக்குள் மட்டுமே படிக்க வேண்டும். அதேநேரம், இறுதி நிலை தேர்வுக்கு முன்பாக நிறைவு செய்திருக்க வேண்டியதும் அவசியம்.இன்டர்மீடியட் நிலையில் உள்ள பிரிவுகள் மற்றும் தாள்கள்:குரூப் 1: அக்கவுண்டிங், கார்ப்ரேட் அண்ட் அதர் லாஸ், காஸ்ட் அண்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டிங், டேக்சேஷன் ஆகிய நான்கு தாள்கள்.குரூப் 2: அட்வான்ஸ்ட் அக்கவுண்டிங், ஆடிட்டிங் அண்ட் அசூரன்ஸ், என்டர்பிரைஸ் இன்பர்மேஷன் சிஸ்டம்ஸ் அண்ட் ஸ்டராடெஜிக் மேனேஜ்மெண்ட், பினான்சியல் மேனேஜ்மெண்ட் அண்ட் எக்னாமிக்ஸ் பார் பினான்ஸ் ஆகிய நான்கு தாள்கள்.இறுதிநிலையில் உள்ள பிரிவுகள் மற்றும் தாள்கள்:குரூப் 1: பினான்சியல் ரிபோர்டிங், ஸ்டராடெஜிக் பினான்சியல் மேனேஜ்மெண்ட், அட்வான்ஸ்டு ஆடிட்டிங் அண்ட் புரொபஷனல் எதிக்ஸ், கார்ப்ரேட் அண்ட் எக்னாமிக் லாஸ் ஆகிய நான்கு தாள்கள்.குரூப் 2: ஸ்டராடெஜிக் காஸ்ட் மேனேஜ்மெண்ட் அண்ட் பர்பாமென்ஸ் எவலுஷன், விருப்பப் பாடம் ஆகிய இரண்டு தாள்கள்.இவ்வாறு குறிப்பிட்ட காலத்திற்குள், ஐ.சி.ஐ.டி.எஸ்.எஸ்., இன்டர்மீடியட் நிலை, ஏ.ஐ.சி.ஐ.டி.எஸ்.எஸ்., மூன்று ஆண்டுகால செயல்முறை பயிற்சி மற்றும் இறுதி தேர்வு ஆகியவற்றை நிறைவு செய்தவர்கள் மட்டுமே ஐ.சி.ஏ.ஐ., அமைப்பில் பதிவு செய்து சி.ஏ., ஆக முடியும்.விபரங்களுக்கு: www.icai.org
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews