👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தியை அனைத்து மாநில மாணவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என கஸ்தூரி ரங்கன் குழு வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் பரிந்துரைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. மத்தியில் பாரதிய ஜனதா அரசு காலங்களில் கல்விக் கொள்கையை மாற்றி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முன்னர் ராஜீவ்காந்தி பிரதமராக இருத தாரளமயமாக்கலுக்கு ஏற்ப கல்விக் கொள்கை மாற்றப்பட்டது. தற்போது பாரதிய ஜனதா அரசு, தம்முடைய இந்துத்துவா கொள்கைக்கு ஏற்க கல்விக் கொள்கையை உருவாக்க முயற்சிக்கிறது என்பது கல்வியாளர்கள் குற்றச்சாட்டு. இதை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை கல்வியாளர்கள் நடத்தி உள்ளனர். கடந்த பாஜக அரசும் புதிய கல்விக் கொள்கையை உருவாக்க கஸ்தூரி ரங்கன் தலைமையில் குழுவை அமைத்தது. இக்குழு குறித்தும் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தியை திணிக்க முயற்சிக்கும் வகையில் இதன் பரிந்துரைகள் இருக்கின்றன என குற்றம்சாட்டப்பட்டது.
கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் கஸ்தூரி ரங்கன் குழு தமது பரிந்துரைகளை ஆர்.எஸ்.எஸ். இயக்க நிர்வாகிகளிடம் சமர்பித்ததும் பெரும் சர்ச்சையானது. இந்த நிலையில் கஸ்தூரி ரங்கன் குழுவின் பரிந்துரைகள் நேற்று புதிய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலிடம் சமர்ப்பிக்கப்பட்டு இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்தும் கேட்கப்பட்டுள்ளன.
மும்மொழிக் கொள்கை இப்பரிந்துரைகளில், இந்தி மொழியை மாணவர்கள் கட்டாயமாக படிக்க வேண்டும் என்கிற வகையில் மும்மொழிக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது. அதாவது தாய்மொழி, இணைப்பு மொழி ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்திய மொழி ஒன்று கட்டாயம் படிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மூன்றாவது மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்கிறது கஸ்தூரி ரங்கன் குழு.

இந்தி கட்டாயம்- எதிர்ப்பு மேலும் யோகா, நீர்மேலாண்மை, அரசியல் ஆகியவை குறித்தும் மாணவர்கள் கட்டாயம் படிக்க வேண்டும் என்கிறது கஸ்தூரி ரங்கன் குழு. இக்குழுவின் பரிந்துரைகள் கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளன.இருப்பினும் வரும் கல்வியாண்டிலேயே இப்புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்த மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
அக்னி பரீட்சை ஏற்கனவே கஸ்தூரி ரங்கன் குழுவின் சர்ச்சை பரிந்துரைகள் குறித்து கருத்து தெரிவித்த மத்திய அரசு, எந்த மொழியையும் கட்டாயமாக்க வேண்டும் என்று அக்குழு பரிந்துரைக்கவில்லை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் மறுப்பு தெரிவித்திருந்தார், தற்போதைய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார் ரமேஷ் பொக்ரியால். அவருக்கான அக்னி பரீட்சையாக இந்த கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகள் இருக்கப் போகிறது. ரமேஷ் பொக்ரியால், ஆர்.எஸ்.எஸ். இயக்கம் நடத்தி வரும் சரஸ்வதி சிசு மந்திர் பள்ளியில் ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய உத்தரகாண்ட் முதல்வராக பதவி வகித்தவர். தற்போது மத்திய அமைச்சராக பதவி ஏற்ற உடனேயே புதிய கல்வி கொள்கை பரிந்துரைகளை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U