👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருநெல்வேலி மாவட்டத்தில் மக்கள் பங்களிப்புடன் ஐந்து அரசு பள்ளிகளில் கழிப்பறைகள் கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் பல அரசு பள்ளிகளில் கழிப்பறை இல்லாமல் மாணவ, மாணவிகள் சிரமப்படுகின்றனர்.மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் உயர்நீதிமன்ற கிளையில் 2016ல் வழக்கு தொடர்ந்தார். அதில், தமிழகத்தில் 37 ஆயிரத்து 32 பள்ளிகள் உள்ளன. இதில் 4 ஆயிரத்து 375 பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லை, குறிப்பாக 898 பெண்கள் பள்ளிகளிலும், 1189 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதிகள் இல்லை, என குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பாக நீதிமன்றம் நியமித்த குழுக்கள் தென்மாவட்டங்களில் கள ஆய்வு செய்து அறிக்கை அளித்தனர்.அதன்பின் நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.கிருஷ்ணகுமார் ஆகியோர், 3 ஆண்டுகளுக்குள் அனைத்து அரசு பள்ளிகளிலும் கழிப்பறைகள் கட்டித்தரவேண்டும் என உத்தரவிட்டனர். அந்த உத்தரவு இன்னமும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை.
இதனிடையே பொதுமக்கள் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் உதவியுடன் நவீன கழிப்பறைகளை கட்டி, திருநெல்வேலி மாவட்டம் தமிழகத்திற்கு முன்னோடியாக திகழ்கிறது.
இம்மாவட்டத்தில் ஏர்வாடி உள்ளிட்ட ஐந்து அரசு மேல்நிலை பள்ளிகளுக்கு தலா 15 லட்சம் செலவில் நவீன கழிப்பறைகளை தொண்டு நிறுவனம் கட்டித்தந்துள்ளது.
இதுகுறித்து ஏர்வாடியை சேர்ந்த சமூக பணியாளர் அய்டா கூறுகையில், ஏர்வாடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரத்து 100 மாணவிகள் பயில்கின்றனர். உள்ளூர் வளர்ச்சி மன்றத்தினர் முஸ்தபா தலைமையில் இதற்கான முயற்சி எடுத்தனர். டி.வி.எஸ். குழும தலைவர் சீனிவாசன் நலப்பணிகள் அறக்கட்டளையினர் நிதியுதவி அளித்தனர். இதேபோன்று திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, கடம்பன்குளம், சேரன்மகாதேவி பள்ளி மாணவிகளுக்கும் நவீன கழிப்பறையை கட்டப்பட்டுள்ளன. என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U