👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here

வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டார்.
மேலும் பள்ளி திறந்த முதல் நாள் அன்றே விலையில்லா பாடநூல்கள், இதர பொருட்களை வழங்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆணை பிறப்பித்தார். ஆனால் வெயிலால் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படலாம் என்ற செய்திகள் அதிகமாக உலவி வருகின்றது.இந்நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுப்பு தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், 210 நாட்கள் பள்ளிகள் செயல்பட்டால் மட்டுமே புதிய பாடத்திட்டம் முழுமையாக கற்பிக்க முடியும். இதன் காரணமாகவே ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U