👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
சென்னை பல்கலைக்கழகத்தில் ஜூன் 15 முதல் தொலைதூர கல்வி தேர்வு நடைபெறும் என தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திகுறிப்பு:சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி பிரிவுக்கு உட்பட்ட இளங்கலை, முதுகலை, தொழில்சார் படிப்புகள், இளநிலை நூலகர், முதுநிலை நூலகர் படிப்புகளுக்கான தேர்வு ஜூன் 15ம் தேதி முதல் சனி மற்றும் ஞயிற்றுக்கிழமைகளில் நடைபெற உள்ளது.
அதேபோல், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூலை 8ம் தேதி முதல் சென்னை மையத்தில் மட்டும் நடைபெறும். இதற்கான தேர்வு அட்டவணை, ஹால் டிக்கெட் சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி பிரிவு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 2018-19ம் கல்வியாண்டு, 2019 நாட்காட்டி ஆண்டு மாணவர்களுக்கு மட்டும் ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்காது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களை
www.ideunom.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U