JEE பொது தேர்வு முடிவுகள் வெளியானது - கோவை மாணவர் முதலிடம் - CLICK HERE FOR RESULTS - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 01, 2019

JEE பொது தேர்வு முடிவுகள் வெளியானது - கோவை மாணவர் முதலிடம் - CLICK HERE FOR RESULTS

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தேசிய தேர்வு நிறுவனதால் நடத்தப்பட்ட JEE 2019 பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது முன்னதாக கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட JEE 2019 பொது தேர்விற்கு 9,29,198 பொறியியல் பிரிவு மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். தற்போது ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தேர்விற்கு 9,35,741 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். சுமார் 6,543 பொறியியல் பிரிவு மாணவர்கள் ஏப்ரல் மாத தேர்விற்கு அதிகமாக விண்ணப்பித்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் கட்டிடக்கலை பிரிவு தேர்விற்கு ஜனவரி மாதத்தில் 1,80,052 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர், ஏப்ரல் மாத தேர்விற்கு 1,69,767 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர். அதாவது., சுமார் 10,285 மாணவர்கள் ஏப்ரல் மாத தேர்விற்கு குறைவாக விண்ணப்பித்து உள்ளனர்.
ஐந்த நாட்கள் நடத்தப்பட்ட ஏப்ரல் மாத தேர்வானது கடந்த ஏப்ரல் 12-ஆம் நாள் முடிவடைந்தது. இந்த JEE 2019 பொது தேர்வில் தேர்ச்சி பெறும் 2,24,000 மாணவர்கள் JEE 2019 முன்மை தேர்விற்கு அனுப்பி வைக்கப்படுவர். JEE தேர்வுகளானது, NIT, IIIT, SFTI மற்றும் CFTI ஆகிய கல்லூரிகளில் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடகலை இளங்கலை படிப்பிற்கான இடங்களை நிரப்ப நடத்தப்படுகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் JEE தேர்விற்கான அங்கிகாரத்தினை மாநில அரசுகள் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. CLICK HERE FOR RESULTS (DIRECT LINK UPDATED) நிகழாண்டுக்கான ஜேஇஇ பிரதான (மெயின்) தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை இரவு வெளியிடப்பட்டன*
*மாணவர்கள் இதனை ஜேஇஇ.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jeemain.nic.in) இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்*
*ஐஐடி, என்.ஐ.டி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பொறியியல், கட்டடக்கலை போன்ற துறைகளில் பட்டப்படிப்பை மேற்கொள்ள ஜே.இ.இ. எனப்படும் ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வு (Joint Entrance Examination) நடத்தப்படுகிறது. இதனை என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது* *இந்த ஆண்டு முதல் இந்த தேர்வு இரண்டு முறை நடத்தப்படுகிறது. கடந்த ஜனவரி மாதம் ஜே.இ.இ மெயின் முதல் தேர்வு நடைபெற்றது* *ஏப்ரலில் ஜே.இ.இ* *மெயின் இரண்டாவது தேர்வு நடைபெற்றது* *இந்த இரு தேர்வுகளையும் எழுதியவர்கள் எந்தத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களோ அதனை அடிப்படையாக வைத்து தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும்* *இந்த ஆண்டு ஜேஇஇ மெயின் இரண்டாவது தேர்வு ஏப்ரல் 7 முதல் 12 வரையிலான நாள்களில் நடைபெற்றது* *மாணவர்கள் தேர்வு முடிவுகளை ஜேஇஇ.யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (jeemain.nic.in) தெரிந்து கொள்ளலாம்* *தேர்வு முடிவுகளின்படி மொத்தம் 24 மாணவர்கள் சதம் எடுத்துள்ளனர்*
*இந்த இரு தேர்வுகளையும் மொத்தம் 11 லட்சத்து 47 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். இதில் 2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர்* *தமிழக அளவில் கோவையைச் சேர்ந்த விக்ரம் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். அவர் தேசிய அளவில் 28-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்* *சென்னையைச் சேர்ந்த கெளரவ பிரகாஷ் தமிழக அளவில் 2-ஆவது இடத்தையும் தேசிய அளவில் 133 இடத்தையும் பிடித்துள்ளார்*
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews