குற்ற வழக்குகளை மறைத்து விண்ணப்பம்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

குற்ற வழக்குகளை மறைத்து விண்ணப்பம்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
குற்ற வழக்குகள் இருப்பதை முழுமையாக மறைத்தவர்களுக்கு காவல், சிறை, தீயணைப்பு துறையில் பணி நியமனம் பெற உரிமையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ல் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், குற்றவழக்கு நிலுவையில் இருப்பதை மறைத்ததாக விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நிராகரித்ததை எதிர்த்து 46 பேர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
'போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத் துறைக்கு, குற்ற வழக்குகளை முழுமையாக மறைத்தவர்கள், சந்தேகத்தின் அடிப்படையில், விடுதலையானவர்களின் விண்ணப்பங்களை நிராகரித்தது சரியே' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.46 மனுக்கள்கடந்த, ௨௦௧௭ல், போலீஸ், தீயணைப்பு மற்றும் சிறைத் துறை பணியாளர்களுக்கான தேர்வு நடந்தது. எழுத்துத் தேர்வு, மருத்துவத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அவர்களின் பின்னணி பற்றி சரிபார்க்கப்பட்டது. அப்போது, ௪௬ பேரின் பின்னணியில் பிரச்னை எழுந்தது.இவர்களுக்கு எதிராக, குற்ற வழக்குகள் இருந்ததை மறைத்து விண்ணப்பித்தது; சந்தேகத்தின் பலனில் வழக்குகளில் விடுதலையானது; சமாதான நடவடிக்கை மற்றும் வழக்கில் இருந்து பெயர் நீக்கத்தால் விடுதலையானது போன்ற விபரங்கள் தெரிய வந்தன. இதனால், ௪௬ பேரது விண்ணப்பங்களையும், சீருடை தேர்வு வாரியம் நிராகரித்தது. இதை எதிர்த்து, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், ௪௬ மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 'விண்ணப்பங்களை நிராகரித்தது தவறு. இது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது; எங்களுக்கு நியமனம் வழங்க வேண்டும்' என, மனுக்களில் கோரப்பட்டது.மனுக்களை விசாரித்த, நீதிபதி, ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:போலீஸ் துறையில் சேர விரும்புவோருக்கு, அப்பழுக்கற்ற பண்பு, நேர்மை இருக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளது.
குற்ற வழக்கில் ஒருவர் விடுதலை ஆனாலும், பணி நியமனம் பெற தானாக உரிமை வந்து விடாது; அவரது பின்னணியை, பதவியில் நியமிக்க தகுதி உள்ளதா என்பதை, நிர்வாகம் பரிசீலிக்கலாம் என்றும் கூறியுள்ளது.தகுயில்லைகுற்றப் பின்னணி உடையவர்கள், இந்த துறைக்கு தகுதியானவர்கள் அல்ல. தண்டனை பெற்றவர்கள், பணி நியமனம் பெற தகுதியில்லை. விடுதலையை பொறுத்தவரை, முழுமையான விடுதலைக்கும், சந்தேகத்தின் பலனில் வரும் விடுதலைக்கும், வேறுபாடு உள்ளது. இரண்டையும், சமமாக கருத முடியாது.போலீஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் போதும், பின்னணியை சரிபார்க்கும் போதும், குற்ற வழக்குகளில் தொடர்பு இருந்ததை முழுமையாக மறைத்தவர்களுக்கு, நீதிமன்றம் கருணை காட்ட முடியாது.
அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்க தகுந்தவை தான். சந்தேகத்தின் பலனில் விடுதலை பெற்றவர்களும், பணி நியமனத்துக்கு தகுதி இல்லை.சமரச அடிப்படையில் விடுதலை, முதல் தகவல் அறிக்கையில் பெயர் நீக்கம் உள்ளிட்ட காரணங்களால் விடுதலை பெற்றால், அவரது குற்றப் பின்னணியையும், அவரை நியமித்தால் போலீஸ் துறை கெட்டு விடுமா என்பதையும் பரிசீலித்து, நியமனம் குறித்து தேர்வுக்குழு முடிவு எடுக்கலாம்.எனவே, குற்ற வழக்குகள் இருப்பதை தெரிவித்து, முழுமையான விடுதலை பெற்றவர்கள், வழக்குகள் முடிக்கப்பட்டவர்களை, போலீஸ் தேர்வுக்கு பரிசீலித்து நியமிக்கலாம். இந்த அடிப்படையில், ௧௪ பேரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது, ரத்து செய்யப்படுகிறது. குறுக்கிட மாட்டோம் பெயர் நீக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் விடுதலை பெற்ற, ௧௫ பேரது வழக்கு, மீண்டும் பரிசீலனை குழுவின் முடிவுக்கு அனுப்பப்படுகிறது. குற்ற வழக்குகள் இருப்பதை முழுமையாக மறைத்தவர்கள், சந்தேகத்தின் பலனில் விடுதலை பெற்றவர்கள் என, ௧௭ பேரது விண்ணப்பங்களை நிராகரித்ததில், குறுக்கிட விரும்பவில்லை. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews