தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு...17 விதிகள் குறித்து சேதனை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு...17 விதிகள் குறித்து சேதனை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பள்ளி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்களில் தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாம்பரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள, தனியார் பள்ளி வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள், நேற்று ஆய்வு செய்தனர். தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்குட்பட்ட, தனியார் பள்ளி பேருந்துகள், பீர்க்கன்காரணையில், நேற்று ஆய்வு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இதில், 60க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த, 400க்கும் அதிகமான பேருந்துகள், வேன்கள் ஆய்வு செய்யப்பட்டன.தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர், ராஜ் குமார், தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர், துரை ஆகியோர் முன்னிலையில், இந்த ஆய்வு நடந்தது.மோட்டார் வாகன சட்டம், 2012ன் படி, முதல் உதவி பெட்டி, அவசர கால ஜன்னல், முறையாக இயங்குகிறதா, பள்ளி வாகனம் என்பதற்கான அடையாளம், தீ அணைப்பான் கருவி போன்ற, 17 விதிகள் குறித்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.'நேற்று மட்டும், 174 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன; 25 வாகனங்கள், சிறிய குறைபாடுகள் காரணமாக, திருப்பி அனுப்பப்பட்டன. மற்ற வாகனங்கள், 18ம் தேதி, ஆய்வு செய்யப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோடை விடுமுறை முடிந்து ஜீன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதற்குள் பள்ளிப் பேருந்துகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு வசதிகள், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள், அவசரகால வழி, தீயணைப்பு கருவிகள், முதலுதவி பெட்டி ஆகியவற்றின் தரத்தை ஆய்வு செய்யும் பணிகளில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் திருப்பூர் சிக்கண்ணா அரசு கலை கல்லூரியில், திருப்பூர் வடக்கு, தெற்கு, அவிநாசி வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 500க்கும் மேற்பட்ட பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற பள்ளி வாகன ஆய்வை, மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் துவக்கி வைத்தார். தொடர்ந்து பேருந்துகளில் ஆய்வு செய்து குறைபாடுகளின்றி இருந்த பேருந்துகளுக்கு தரச்சான்றிதழையும் வழங்கினார். இதேபோல் நெல்லையில் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் பள்ளி வாகனங்களில் தரக்கட்டுப்பாடு குறித்த ஆய்வை தொடங்கி வைத்தார். முன்னதாக ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews