இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்துவதில் குழப்பம்: தனியாரிடம் ஒப்படைக்க திட்டமா? பரபரப்பு தகவல்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 08, 2019

இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்துவதில் குழப்பம்: தனியாரிடம் ஒப்படைக்க திட்டமா? பரபரப்பு தகவல்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பிஇ, பிடெக் படிப்புகளுக்கான கவுன்சலிங் அண்ணா பல்கலைக் கழகம் நடத்த மறுத்ததை அடுத்து தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் நடத்த உள்ளது. இந்நிலையில், போதிய வழிகாட்டுதல் இல்லை என்பதால் இன்ஜினியரிங் கவுன்சலிங் நடத்தும் பொறுப்பு தனியாரிடம் கொடுக்க அரசு முடிவு செய்துள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், இணைப்பு பெற்ற கல்லூரிகள் என தமிழகத்தில் சுமார் 500 பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் படிப்புக்கான மவுசு குறைந்து வரும் நிலையில் ஒவ்வொரு ஆண்டும் பொறியியல் படிப்புக்கான இடங்களை மட்டும் அண்ணா பல்கலைக் கழகம் உயர்த்தி வருகிறது. இதனால் விண்ணப்பம் போட்ட அனைத்து மாணவர்களுக்கும் இடம் கிடைக்கும் என்ற பிம்பத்தை அண்ணா பல்கலைக் கழகம் உருவாக்கியுள்ளது. ஆனால், பொறியியல் கவுன்சலிங்கில் பல்வேறு குளறுபடிகள் நடக்கிறது என்றும், முறைகேடுகள் நடக்கிறது என்றும் கல்வியாளர்கள் மற்றும் அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் ஒரு தரப்பு பேராசிரியர்கள் தரப்பில் தொடர்ந்து புகார் தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் அண்ணா பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக சூரப்பாவை தமிழக ஆளுநர் நியமித்தார்.
இதனால் அண்ணா பல்கலைக் கழகத்தில் முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்கும் பணி தொடங்கியது. இதனால் சிலர் அதிருப்தி அடைந்தனர். துணை வேந்தரை மாற்ற முயற்சி மேற்கொண்டனர். இதையடுத்து, பொறியியல் கவுன்சலிங் நடத்தும் முக்கிய பொறுப்பில் இருந்து துணை வேந்தர் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டுக்கான பொறியியல் கவுன்சலிங்கை அண்ணா பல்கலைக் கழகம் நடத்தாது என்ற துணை வேந்தர் பகிரங்கமாக அறிவித்தார். இதையடுத்து, இந்த ஆண்டுக்கான கவுன்சலிங்கை தொழில் நுட்பக் கல்வி இயக்ககமே நடத்தும் என்று அரசு அறிவித்தது. கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக அண்ணா பல்கலைக் கழகமே பொறியியல் கவுன்சலிங்கை நடத்தி வந்த நிலையில், அதற்கான மென்பொருளையும் அண்ணா பல்கலைக் கழகமே வடிவமைத்துள்ளது. தற்போது தொழில் நுட்ப கல்வி இயக்ககம் பொறியியல் கவுன்சலிங்கை நடத்துவதற்கான மென்பொருள் வடிவமைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அதனால் தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தால் கவுன்சலிங்கை நடத்த முடியாது என்று கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும், தனியார் நிறுவனத்திடம் கொடுத்து கவுன்சலிங்கை நடத்த உள்ளதாகவும் குறை கூறுகின்றனர். இதற்கிடையே, பொறியியல் கவுன்சலிங் தொடங்குவதற்கான தற்காலிக அட்டவணையை தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டு, விண்ணப்பம் வினியோகம் செய்து வருகிறது. இதுவரை 57 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 43 ஆயிரம் மாணவ மாணவியர் ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தியுள்ளனர். மேலும், இந்த ஆண்டுக்கான பொறியியல் கவுன்சலிங்கை தொழில் நுட்பக் கல்வி இயக்ககமே நடத்தும் என்று அதன் இயக்குநர் விவேகானந்தன் தெரிவித்துள்ளார். இருப்பினும் மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews