நீட் தேர்வு கெடுபிடி: ஹால் டிக்கெட் மட்டும் இருந்தால் போதாது! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

நீட் தேர்வு கெடுபிடி: ஹால் டிக்கெட் மட்டும் இருந்தால் போதாது!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
காதணி, மூக்குத்தி, மாலை, வளையல், ஷூ, பெல்ட் என எதுவும் அணிய அனுமதி இல்லை. இந்தக் கட்டுபாடுகள் மட்டுமின்றி தேர்வு மையங்களையும் மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. புகைப்படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட் வைத்திருந்தால் மட்டும் போதாது. ஆதார் போன்ற வேறொரு அடையாள அட்டையையும் கட்டாயம். நீட் தேர்வு எழுத வரும் மாணவர்கள் ஹால் டிக்கெட் மட்டும் வைத்திருந்தால் போதாது என தேசிய தேர்வாணையமான என்.டி.ஏ. அறிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ். முதலான இளநிலை மருத்துவ பட்டப் படிப்புகளில் சேர தேசிய அளவில் நடத்தப்படும் நீட் (NET UG) நுழைவுத் தேர்வு இந்த ஆண்டு மே 5ஆம் தேதி நடக்க உள்ளது. நாளை (மே 5) தேர்வு நடைபெற உள்ள நிலையில் கடந்த ஆண்டைப் போலவே கெடுபிடி விதிமுறைகள் கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மாணவ மாணவியர் புகைப்படம் ஒட்டப்பட்ட ஹால் டிக்கெட் வைத்திருந்தால் மட்டும் போதாது, ஆதார் போன்ற வேறொரு அடையாள அட்டையையும் வைத்திருந்தால்தான் தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என என்.டி.ஏ. கூறியுள்ளது. ஆடை கட்டுப்பாடும் கடந்த ஆண்டைப் போலவே தொடர்கிறது. காதணி, மூக்குத்தி, மாலை, வளையல், ஷூ, பெல்ட் என எதுவும் அணிய அனுமதி இல்லை. இந்தக் கட்டுபாடுகள் மட்டுமின்றி தேர்வு மையங்களையும் மாற்றி புதிய ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைப் பொதுத் தேர்தல் மற்றும் இதர தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த மாற்றம் செய்யப்படுவதாக என்.டி.ஏ. சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ntaneet.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மாற்றப்பட்டுள்ள தேர்வு மையங்கள் பற்றிய தகவலை அறிந்துகொள்ளலாம். இது குறித்து மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., ஈமெயில் மற்றும் வாய்ஸ் மெசேஜ் மூலமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மே 5ஆம் தேதி தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தவறாமல் புதிய ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Neet Dress Code: மாணவிகள் குட்டை பாவாடை அணியலாம், முழு கை சுடிதார் அணியக்கூடாது! நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளுக்கு கடுமையான ஆடை கட்டுபாடு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இதன்படி தான் ஆடைகள் அணிந்து செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் வரும் 5ம் தேதி மதியம் 3.00 மணி முதல் 5.00 மணி வரையில் நடக்கிறது. தேர்வுக்கான ஹால் டிக்கெட் இல்லாத மாணவர்கள் ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம். ஹால் டிக்கெட் இல்லாத மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். அத்துடன் ஏதேனும் ஒரு அடையாள அட்டை கொண்டு செல்லவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். நீட் தேர்வுக்காக நாடு முழுவதும் மொத்தம் 154 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தேர்வுக்கு வரும் மாணவ மாணவியருக்கு ஆடை கட்டுபாடும் விதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாணாக்கர்கள் தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ள பின்வரும் ஆடைகட்டுபாட்டை பின்பற்ற வேண்டும்:
நீட் 2019 தேர்வு ஆடை கட்டுபாடு: மேலாடை: மேலாடை முழுக்கையுடன் இருப்பதை தவிர்க்க வேண்டும். ஆடை கட்டுபாடு சோதனைக்காக தேர்வு நேரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே தேர்வு மையத்துக்கு சென்று ஆஜராக வேண்டும். காலணிகள்: ஷூக்கள் அணியக்கூடாது. வெறும் செருப்பு அணிய வேண்டும். பெண்கள் லோ ஹீல்ஸ் ஸ்லிப்பர் தான் அணிய வேண்டும்.
மாணவருக்கான ஆடை கட்டுபாடு: மாணவர்கள் மெலிதான சட்டை, டி-சர்ட் அணிய வேண்டும். அதில் சட்டை, டி-சர்ட்டில் பாக்கெட், ஷிப், பெரிய பட்டண்கள், எம்பிராய்ட்ரி இருப்பதை தவிர்க்க வேண்டும். அரை கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். இதே போல் குர்தா, பைஜாமா அணியக் கூடாது. டிரவுசர் அணிந்து வரலாம். ஷூ அணிவதற்குப் பதிலாக செருப்பு அணிந்து வருவது நலம்
மாணவிகளுக்கான ஆடை கட்டுபாடு: எம்பிராய்ட்ரி, பட்டன், ப்ரூச்சஸ் இருக்கும் ஆடைகள் அணிந்து வருவதை தவிர்க்க வேண்டும். முழு கை சுடிதார், பிளவுஸ் அணியக்கூடாது. சுடிதார், குட்டைப் பாவடை அணிந்து வரலாம். லோ ஹீல் செருப்பு, சாதாரண செருப்பு மட்டும் அணியலாம். ஷூ அணியக்கூடாது. நெக்லஸ், கம்மல், மூக்குத்தி போன் நகைகள் எதுவும் அணியக் கூடாது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews