நீதிமன்ற பணியிடங்கள் நிரப்ப உத்தரவு: தற்காலிக ஊழியர்களுக்கு 'வெயிட்டேஜ்'! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, May 12, 2019

நீதிமன்ற பணியிடங்கள் நிரப்ப உத்தரவு: தற்காலிக ஊழியர்களுக்கு 'வெயிட்டேஜ்'!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகம் முழுவதும், கீழமை நீதிமன்றங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை, ஜூலை, ௧௬க்குள் நிரப்பும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.வேலைவாய்ப்பு அலுவலகம் வழியாக விண்ணப்பங்களை வரவேற்று, கீழமை நீதிமன்றங்களில், தற்காலிக நியமனங்கள் செய்யப்பட்டன. ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் பணி முடித்த, தற்காலிக ஊழியர்கள் சிலர், பணி வரன்முறை கேட்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். மனுக்களை, நீதிபதிகள் சசிதரன், டீக்காராமன் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸ் உள்ளிட்டோரும், உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் சார்பில், வழக்கறிஞர் ஹாஜா முகைதீன் கிஸ்தி; அரசு தரப்பில், சிறப்பு பிளீடர் ஸ்ரீஜெயந்தியும் ஆஜராகினர்.முயற்சிநீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:மாவட்ட நீதிமன்றங்களில் பணியாற்றும் தற்காலிக ஊழியர்கள், பணிவரன்முறை கோரியதை, ஏற்கனவே நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கீழமை நீதிமன்றங்களில், அதிக காலியிடங்கள் இருப்பதை பார்க்கும் போது, பெரும்பாலான மாவட்ட நீதிபதிகள், பணியிடங்களை நிரப்ப, முயற்சிகள் எடுக்காததை காட்டுகிறது.அனுமதிக்கப்பட்ட இடங்களை தாமதமின்றி, நிரப்ப, மாவட்ட நீதிமன்றங்களும், அரசு பணியாளர் தேர்வாணையமும், முயற்சி எடுக்க வேண்டும். தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டவர்களின் பணிக்கு, 'வெயிட்டேஜ்' அளிக்க வேண்டும். தற்காலிக ஊழியர்களுக்கு வயது வரம்பு தளர்வு, முன்னுரிமை குறித்து, பல உத்தரவுகளை, நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.
காலியிடங்களை அறிவித்து, தேர்வு நடவடிக்கையை, ஜூலை, ௧௬க்குள், மாவட்ட நீதிபதிகள் முடிக்க வேண்டும். நியமனத்துக்கு பின், மாவட்ட நீதித்துறையில், தற்காலிக நியமனம் எதுவும் இருக்கக் கூடாது. வாய்ப்புதற்காலிகமாக பணியாற்றி விடுவிக்கப்பட்டவர்கள் மற்றும் பணியில் இருப்பவர்களுக்கு, நிரந்தர நியமனம் கோர வாய்ப்பு அளிக்க வேண்டும். தற்காலிக ஊழியர்கள் பணியாற்றிய காலத்துக்கான சான்றிதழ்களை, மாவட்ட நீதிபதிகள் வழங்க வேண்டும். ஓராண்டு பணி நிறைவுக்கு ஒரு மதிப்பெண் என, அதிகபட்சம், ௧௦ மதிப்பெண் பெற, தற்காலிக ஊழியர்களுக்கு உரிமை உள்ளது. ஓராண்டுக்கு குறைவாக பணியாற்றி இருந்தால், ஒரு மதிப்பெண் வழங்கலாம். காலியிடங்களை, ஜூலை, ௧௬க்குள் நிரப்பி, ஜூலை, ௧௭ல், பதிவுத்துறைக்கு அறிக்கை அனுப்ப, மாவட்ட நீதிபதிகளுக்கு உத்தரவிடப்படுகிறது. தேர்வு நடவடிக்கைகள், குறிப்பிட்ட அவகாசத்துக்குள் முடிவதை உறுதி செய்ய, உயர் நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews