சுயநிதி பிரிவு படிப்பு கட்டண நிர்ணயம் தனியார் கல்லூரிகள் போர்க்கொடி - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 20, 2019

சுயநிதி பிரிவு படிப்பு கட்டண நிர்ணயம் தனியார் கல்லூரிகள் போர்க்கொடி

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
'மதுரை காமராஜ் பல்கலைக்கு உட்பட்ட உதவிபெறும் மற்றும் சுயநிதி பிரிவு கல்லுாரிகளில் கட்டணம் நிர்ணயம் தொடர்பாக விசாரணை நடத்த வரும் குழுக்களிடம் துணைவேந்தரின் எழுத்துப்பூர்வ உத்தரவு இருந்தால் மட்டுமே கல்லுாரிக்குள் அனுமதிக்கப்படும்' என கல்லுாரி நிர்வாகங்கள் போர்க்கொடி துாக்கியுள்ளன.
உதவிபெறும் மற்றும் சுயநிதி பிரிவு கல்லுாரிகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தமிழ்நாடு உயர்கல்வி பாதுகாப்பு இயக்க தலைவர் முரளி மற்றும் மூட்டா அமைப்பு சார்பில் கவர்னர், உயர் கல்வி செயலர், பல்கலை துணைவேந்தர்களுக்கு புகார் அனுப்பப்பட்டது. இப்புகாரின்படி பேராசிரியர் குழுக்கள் அமைத்து கல்லுாரிகளில் விசாரணை நடத்த மதுரை காமராஜ் பல்கலை முடிவு எடுத்துள்ளது.இதுகுறித்து துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் இன்று (மே 20) விசாரணை குழுக்கள் ஏற்படுத்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதில் உயர்கல்வி பாதுகாப்பு இயக்கம் மற்றும் மூட்டா தெரிவித்துள்ள புகாரின்படி விசாரணை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அதேநேரம் விசாரணையின் போது துணைவேந்தரின் உத்தரவு நகல் இருந்தால் மட்டுமே கல்லுாரி வளாகத்திற்குள் குழுவை அனுமதிக்க கல்லுாரி நிர்வாகங்கள் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து உதவி பெறும் மற்றும் தனியார் கல்லுாரி முதல்வர்கள் சிலர் கூறியதாவது:சுயநிதி பிரிவுகளுக்காக கல்லுாரி நிர்வாகங்கள் எந்த உதவியும் அரசிடம் பெறவில்லை. சில அமைப்புகள் வேண்டும் என்றே அல்லது கல்லுாரிகள் மீதான விரோதம் அடிப்படையில் புகார்களை கிளப்பி விடுகின்றன. விதிப்படியே கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது. கட்டண நிர்ணயம் தொடர்பாக நீதிமன்றமும் உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.எனவே விசாரணைக்கு வரும் பல்கலை குழுவிடம், 'எதன் அடிப்படையில் விசாரணை நடத்தப்படுகிறது' என்ற துணைவேந்தரின் உத்தரவு நகல் இருந்தால் மட்டுமே விசாரணைக்கு அனுமதிக்கப்படும். நீதிமன்ற உத்தரவு என்றால் மட்டும் மதிக்கப்படும், என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews