தமிழக வணிகவரித்துறை ஜூன் 1ம் தேதி முதல் மறுசீரமைப்பு: வேலை போகும் அச்சத்தில் தமிழக அதிகாரிகள்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 20, 2019

தமிழக வணிகவரித்துறை ஜூன் 1ம் தேதி முதல் மறுசீரமைப்பு: வேலை போகும் அச்சத்தில் தமிழக அதிகாரிகள்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here
தமிழக வணிகவரித்துறை ஜூன் 1ம் தேதி முதல் மறுசீரமைப்பு செய்யப்படுகிறது என்றும், புதிதாக உருவாக்கப்பட்ட சேவை வரிக்குழுவில் மத்திய அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்படுகின்றனர் என்று வணிகவரித்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நாட்டில் கடந்த 2017 ஜூலை 1ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்திய பிறகு சரக்கு மற்றும் சேவை வரிக்கும் சேர்த்தும் வரி விதிக்கப்படுகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தின் வணிகவரித்துறையை மறு சீரமைப்பு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மறு சீரமைப்பின் படி, 6 கூடுதல் ஆணையர்கள் பொறுப்பின் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது. கூடுதல் ஆணையர் (சட்ட பிரிவு), கூடுதல் ஆணையர் (ஆய்வு, மேல்முறையீடு மற்றும் மறு வரையறை), கூடுதல் ஆணையர் (நுண்ணறிவு பிரிவு), கூடுதல் ஆணையர் (வருமானம் வசூலிப்பு மற்றும் கண்காணிப்பு), கூடுதல் ஆணையர் (கொள்கை மற்றும் மக்கள் தொடர்பு), கூடுதல் ஆணையர் (ஜிஎஸ்டி அல்லாத) உள்ளிட்ட பணியிடங்கள் ஏற்படுத்தப்படுகிறது. மேலும், சேவை வரி குழு ஒன்று புதிதாக ஏற்படுத்தப்படுகிறது. இந்த குழுவில் கூடுதல் ஆணையர் தலைமையில் இணை ஆணையர்-1, துணை ஆணையர்-2, உதவி ஆணையர்-4, மாநில வரி அதிகாரி-1, துணை மாநில வரி அதிகாரி ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்படுகிறது. இதில், மத்திய அரசு சார்பில் அயல்பணி அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
தற்போது, கோவை, சேலத்தில் ஒரு பகுதியை பிரித்து புதியதாக ஈரோடு வரிக்கோட்டம் ஒன்றும் ஏற்படுத்தப்படவுள்ளது. மேலும், கமிஷனர் தலைமையில் வணிக வரித்துறையில் அமலாக்கப்பிரிவை நுண்ணறிவு பிரிவாக பெயர் மாற்றப்படுகிறது. அதே நேரத்தில், இணை ஆணையர் பணியிடத்தின் ெபயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இணை ஆணையர் (ஜிஎஸ்டி அல்லாத), இணை ஆணையர் (கொள்கை மற்றும் திட்டம்), இணை ஆணையர் (ஈரோடு), இணை ஆணையர் (அமலாக்கப்பிரிவு) ஈரோடு, இணை ஆணையர் (ஜிஎஸ்டி மேல்முறையீடு) எனற பெயர் மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று 18 துணை ஆணையர் பணியிடங்களின் பொறுப்புகளிலும் பெயர் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த துறை மறு சீரமைப்பு பணிகள் வேகமாக நடந்து வருகிது. வரும் ஜூன் 1ம் தேதி முதல் வணிக வரித்துறையில் புதிய பெயருடன் நிர்வாக கட்டமைப்புகள் மறுசீரமைப்பு செய்து செயல்படுகிறது. மேலும், புதிதாக உருவாக்கப்பட்ட சேவை வரிக்குழுவில் மத்திய அரசு ஊழியர்களும் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று வணிகவரித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதனால் தமிழக அதிகாரிகள் பதவி உயர்வு உள்ளிட்டவை பாதிக்கப்படுமா என்ற கலக்கத்தில் உள்ளனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews