திடீரென மாற்றியதால் மாணவர்கள் குழப்பம் தொடங்கியது நீட் குழப்பங்கள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, May 04, 2019

திடீரென மாற்றியதால் மாணவர்கள் குழப்பம் தொடங்கியது நீட் குழப்பங்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு மையங்கள் மதுரையில் திடீரென மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இதனால் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, நாடு முழுவதும் நாளை (ஞாயிறு) நடைபெறுகிறது. இதில் மதுரையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு மையங்கள் கடைசி நேரத்தில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி பதிவு எண் 410602881 முதல் 410603660 வரையுள்ள மாணவர்களுக்கு, மதுரை-ராமேஸ்வரம் நெடுஞ்சாலை, விரகனூரில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிவு எண் 410608041 முதல் 410608640 வரையுள்ள மாணவர்கள், அழகர்கோவில் ஏ.வலையப்பட்டியில் உள்ள லட்சுமி நாராயண வித்யாலயா பள்ளியில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது. பதிவு எண் 410611401 முதல் 410611880 வரையில், விரகனூரில் உள்ள வேலம்மாள் வித்யாலயா பள்ளியில் அமைக்கப்பட்டுள்ளது. பதிவு எண் 410611881 முதல் 410612360 வரையுள்ள மாணவர்கள், மதுரை, எய்ம்ஸ் சாலை தனபாண்டியன் நகரில் உள்ள தனபாண்டியன் பாலிடெக்னிக் கல்லூரியிலும், பதிவு எண் 410612841 முதல் 410613320 வரையுள்ள மாணவர்கள், திருநகர் 3வது பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சி.எஸ்.ராமாச்சாரி மெட்ரிக் பள்ளியிலும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்குறிப்பிடப்பட்டுள்ள பதிவு எண்களை கொண்டவர்கள் www.ntaneet.nic.in என்ற இணையதள முகவரிக்கு சென்று, தங்களது புதிய தகுதித்தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று நீட் தேர்வுக்கான தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கடைசி நேரத்தில் திடீரென வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பால், மாணவ, மாணவிகள் குழப்பத்திற்குள்ளாகி உள்ளனர். இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரை சேர்ந்த மாணவர்கள் கூறும்போது, ‘‘முதலில் நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டில் மதுரை மகாத்மா மாண்டிச்சோரி பள்ளி என இருந்தது. இப்போது இணையதளத்திற்குள் சென்று பதிவு எண்ணை போட்டு பார்த்தால், மதுரை, நாகமலை புதுக்கோட்டை மேற்கு, மேலக்குடியில் உள்ள எஸ்பிஓஏ பள்ளி என வருகிறது. நீண்ட தூரத்தில் இருந்து நுழைவுத்தேர்வுக்கு வரும் மாணவ, மாணவிகள் இதனால் அவதிக்குள்ளாவர். தாங்கள் தேர்வு எழுதச்செல்ல தேர்வு மையத்திற்கு 2 மணிநேரத்திற்கு முன்னதாக வரும்படி கூறப்பட்டுள்ளது. திடீரென தேர்வு மையத்தை மாற்றியதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்தை சென்றடைய முடியுமா என குழப்பத்தை உருவாக்கி உள்ளது” என்றனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews