நோட்டு புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 01, 2019

நோட்டு புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்த பள்ளிகள் அனைத்தும் ஜூன் மாதம் திறக்கப்பட உள்ளது. இதில், அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு பாட புத்தகத்துடன், நோட்டு புத்தகமும் அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படுகிறது. இதனால், தனியார் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு தேவையான நோட்டு புத்தகங்களை வாங்க ஸ்டேஷனரி கடைகளை நோக்கி படையெடுக்க துவங்கி உள்ளனர்.
நோட்டு புத்தகம் தயாரிக்கும் நிறுவனங்கள் ஈரோடு மரப்பாலம், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் அருகே மற்றும் பழைய கோர்ட், மண்டப வீதி உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வருகிறது. பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு மாதமே இருப்பதால் தற்போது புத்தக கடைக்காரர்களும், தனியார் பள்ளிகளும் நோட்டு புத்தகம் தயாரிக்க ஆர்டர் கொடுத்துள்ளனர்.இதனால், ஈரோட்டில் நோட்டு புத்தகம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதுகுறித்து நோட்டு புத்தகம் தயாரிக்கும் தொழிலாளி ஒருவர் கூறுகையில்,`பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டதும், எங்களுக்கு வேலை துவங்கிவிடும். ஏப்ரல் முதல் ஜூன் வரை தான் அதிகமாக வேலை இருக்கும். அதன்பின், தொழில் டல் அடிக்க ஆரம்பித்து விடும். எங்களுக்கு புத்தக கடைக்காரர்களிடம் இருந்து மட்டும் தான் ஆர்டர் வழங்கப்படும். ஆர்டர் கொடுப்பவர்கள் பெரும்பாலும் அவர்களது கடை பெயர் போட்டு தான் நோட்டுக்களை தயாரித்து வழங்குகிறோம். இதனால், ஒரு நோட்டு புத்தகத்திற்கு கூலி நிர்ணயித்து, தயாரித்து கொடுக்கிறோம். 96 பக்க நோட்டு புத்தகம் ரூ.8க்கும், 192 பக்க நோட்டு ரூ.10க்கும் தயாரித்து கொடுக்கிறோம். மே மாத இறுதிக்குள் நோட்டு புத்தகம் தயாரிப்பு பணி முடிந்து புத்தக கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி விடுவோம்’ என்றார்.
3ம் தேதி நடக்கவுள்ள 128வது கீழ் படிதல் அணிவகுப்பு போட்டிகள் நடக்கிறது. இதில், காவல்துறை, ராணுவம், ரயில்வே ஆகிய துறைகளில் உள்ள நாய்கள் பங்கேற்கவுள்ளன. இதை தொடர்ந்து 4ம் தேதி நாய்களுக்கான கண்காட்சி மற்றும் அவைகளின் திறமைகள் குறித்த போட்டி நடத்தப்படுகிறது. பல்வேறு சுற்றுக்களில் வெற்றி பெறும் நாய்களின் உரிமையாளர்களுக்கு 5ம் தேதி நடக்கும் பரிசளிப்பு விழாவில் கேடயம், சான்றிதழ் மற்றும் ரொக்க பரிசு வழங்கப்படவுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews