பி.இ. கலந்தாய்வு: 87ஆயிரம் பேர் பதிவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, May 13, 2019

பி.இ. கலந்தாய்வு: 87ஆயிரம் பேர் பதிவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
பொறியியல் கலந்தாய்வுக்கான ஆன்-லைன் பதிவு 11 நாள்களை முடிந்துள்ள நிலையில், 87 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் 2019-20 கல்வியாண்டுக்கான பி.இ. மாணவர் சேர்க்கை ஆன்-லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்த உள்ளது. இதற்கான ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு, மே 2-ஆம் தேதி தொடங்கியது.
முதல் நாளிலிருந்தே மாணவர்கள் ஆர்வமுடன் விண்ணப்பப் பதிவு செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையுடன் 11 நாள்கள் முடிவடைந்த நிலையில் 87,033 பேர் பதிவு செய்துள்ளனர். கலந்தாய்வு எப்போது?: 2019-20 கல்வியாண்டுக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. முன்னதாக, ஜூன் 3-ஆம் தேதி விண்ணப்பித்தவர்களுக்கான சமவாய்ப்பு எண் வெளியிடப்படும். ஜூன் 6 முதல் 11-ஆம் தேதி வரை அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு உதவி மையங்களில் அசல் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும். அதனைத் தொடர்ந்து ஜூன் 17-ஆம் தேதியன்று தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
பின்னர் முதல்கட்டமாக சிறப்புப் பிரிவினருக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஜூன் 20-ஆம் தேதி தொடங்கப்படும். இந்தப் பிரிவினருக்கும், பிளஸ் 2 தொழிற்பிரிவு மாணவர்களுக்கும் சென்னையில் மட்டும் நேரடி கலந்தாய்வாக நடத்தப்படும். ஜூன் 20-இல் மாற்றுத்திறனாளிகளுக்கான கலந்தாய்வும், ஜூன் 21-இல் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கும், ஜூன் 22-ஆம் தேதி விளையாட்டுப் பிரிவினருக்குமான கலந்தாய்வு நடத்தப்படும். பிளஸ் 2 தொழில் பிரிவு மாணவர்களுக்கு ஜூன் 25 முதல் ஜூன் 28 வரை கலந்தாய்வு நடத்தப்படும். பின்னர், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி, ஜூலை 28-ஆம் தேதி வரை நடத்தப்படும். இந்த மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews