உலக வரலாற்றில் இன்று ( மே 15 ) - பன்னாட்டுக் குடும்ப நாள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 15, 2019

உலக வரலாற்றில் இன்று ( மே 15 ) - பன்னாட்டுக் குடும்ப நாள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
நிகழ்வுகள்
கிமு 495 – மெர்க்குரி கடவுளுக்கான கோயில் பண்டைய ரோம் நகரில் அமைக்கப்பட்டது.
221 – சீன இராணுவத் தலைவர் லியூ பெய் தன்னைப் பேரரசராக அறிவித்தார்.
392 – உரோமைப் பேரரசர் இரண்டாம் வலந்தீனியன் வியென்னாவில் படுகொலை செய்யப்பட்டார்.
908 – மூன்று-வயதான ஏழாம் கொன்ஸ்டன்டைன் பைசாந்தியப் பேரரசனாக நியமிக்கப்பட்டான்.
1536 – இங்கிலாந்தின் அரசி ஆன் பொலின் தேசத்துரோகம், ஒழுக்கக்கேடு, ஒழுக்கமற்ற புணர்வு போன்ற குற்றச்சாட்டுகளுக்காக இலண்டனில் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். சான்றாயர்களினால் இவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.
1567 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி பொத்வெல் பிரபு யேம்சு எப்பர்ன் என்பவரை மூன்றாவது கணவராகத் திருமணம் புரிந்தார்.
1618 – யோகான்னசு கெப்லர் முன்னர் மார்ச் 8இல் நிராகரிக்கப்பட்ட தனது மூன்றாவது கோள் இயக்க விதியை மீண்டும் நிறுவினார்.
1648 – வெஸ்ட்ஃபாலியா அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
1718 – உலகின் முதலாவது இயந்திரத் துப்பாக்கிக்கான காப்புரிமத்தை லண்டனைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜேம்ஸ் பக்கிள் பெற்றார்.
1730 – ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பிரதமராக ராபர்ட் வால்போல் பதவியேற்றார்.
1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவில் இருந்து விடுதலை பெறுவதற்கான முன்மொழிவுகளைத் தருமாறு 5-வது வெர்ஜீனியப் பேரவை காங்கிரசு உறுப்பினர்களைக் கேட்டுக் கொண்டது.
1792 – பிரான்சு சார்தீனிய இராச்சியத்துடன் போரை ஆரம்பித்தது.
1796 – நெப்போலியனின் படைகள் இத்தாலியின் மிலன் நகரைக் கைப்பற்றின.
1800 – ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் படுகொலை முயற்சியில் இருந்து தப்பினார்.
1811 – பரகுவை எசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1848 – 1848 புரட்சிகள்: போலந்து, ஆப்சுபர்க் கலீசியாவில் பண்ணையடிமை ஒழிக்கப்பட்டது.
1849 – இரண்டு சிசிலிகளின் படைகள் பலெர்மோவைக் கைப்பற்றி, சிசிலியின் குடியரசு அரசைக் கலைத்தன.
1850 – கலிபோர்னியாவின் லேக் மாவட்டத்தில் பெருந்தொகையான போமோ இந்தியப் பழங்குடிகள் அமெரிக்க இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1851 – நான்காவது இராமா தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1891 – திருத்தந்தை, பதின்மூன்றாம் லியோ தொழிலாழர் உரிமை, நிலவுரிமை ஆகியவற்றுக்கு ஆதரவான ஆணையைப் பிறப்பித்தார்.
1897 – கிரேக்க துருக்கியப் போரில் கிரேக்கப் படையினர் பெரும் சேதத்துடன் பின்வாங்கினர்.
1904 – உருசிய-சப்பானியப் போர்: சப்பானின் போர்க்கப்பல்கள் ஆட்சூசி, யாசிமா ஆகியன 496 பேருடன் உருசியர்களினால் மூழ்கடிக்கப்பட்டன.
1911 – மெக்சிக்கோவில் தொரெயோன் நகரில் 300 இற்கும் அதிகமான சீனக் குடியேறிகள் மெக்சிக்கோ புரட்சிவாதிகளால் கொல்லப்பட்டனர்.
1919 – துருக்கியின் இசுமீர் நகரை கிரேக்கப் படைகள் முற்றுகையிட்டனர். 350 துருக்கியர்கள் கிரேக்க இராணுவத்தினரால் கொல்லப்பட்டு அல்லது காயமடைந்தனர்.
1928 – வால்ட் டிஸ்னியின் கதாபாத்திரமான மிக்கி மவுஸ் முதற்தடவையாக பிளேன் கிரேசி என்ற கேலிச்சித்திரத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.
1929 – ஒகைய்யோ மாநிலத்தில் கிளீவ்லன்ட் நகரில் மருத்துவமனை ஒன்றில் இடம்பெற்ற தீவிபத்தில் 123 பேர் கொல்லப்பட்டனர்.
1932 – இராணுவப் புரட்சி ஒன்றை அடுத்து சப்பானியப் பிரதமர் இனுக்காய் சுயோசி கொல்லப்பட்டார்.
1934 – கார்லிசு உல்மானிசு லாத்வியாவில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்கினார்
1935 – மொஸ்கோவில் சுரங்கத் தொடருந்து சேவை ஆரம்பமானது.
1940 – இரண்டாம் உலகப் போர்: பெரும் சமருக்குப் பின்னர் இடச்சுப் படைகள் செருமானியப் படைகளிடம் சரணடைந்தன. அடுத்த ஐந்து ஆண்டுகள் நெதர்லாந்து செருமனியின் வசம் இருந்தது.
1940 – மெக்டொனால்ட்சு தனது முதலாவது உணவகத்தை கலிபோர்னியாவில் சான் பெர்னாதீனோவில் ஆரம்பித்தது.
1941 – பிரித்தானிய மற்றும் நட்புப் படைகளின் முதலாவது தாரை வானூர்தி சேவைக்கு விடப்பட்டது.
1943 – ஜோசப் ஸ்டாலின் பொதுவுடைமை அனைத்துலகத்தை (மூன்றாவது பன்னாடு) கலைத்தார்.
1948 – பலத்தீன் மீதான பிரித்தானியக் கட்டளை முடிவுக்கு வந்ததை அடுத்து, இசுரேல் மீது அரபு நாடுகளான எகிப்து, ஜோர்தான், லெபனான், சிரியா, ஈராக், மற்றும் சவூதி அரேபியா ஆகியன இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன.
1955 – உலகின் ஐந்தாவது உயரமான மக்காலு மலையின் உச்சியை பிரெஞ்சு மலையேறிகள் முதன் முதலாக எட்டினர்.
1957 – பசிபிக் பெருங்கடல் பகுதியில் மால்டன் தீவில் பிரித்தானியா தனது முதலாவது ஐதரசன் குண்டை சோதித்தது. ஆனாலும் இது தோல்வியடைந்தது.
1958 – சோவியத்தின் இசுப்புட்னிக் 3 விண்கலம் ஏவப்பட்டது.
1960 – சோவியத்தின் இசுப்புட்னிக் 4 விண்கலம் ஏவப்பட்டது.
1963 – நாசாவின் மேர்க்குரி-அட்லஸ் 9 விண்கலம் ஏவப்பட்டது. கோர்டன் கூப்பர் இவ்விண்கலத்தில் பயணித்து விண்வெளியில் ஒரு நாளுக்கு மேல் தங்கிய முதலாவது அமெரிக்கர் ஆனார். இவரே தனியாளாக விண்வெளிக்குச் சென்ற கடைசி அமெரிக்கர் ஆவார்.
1972 – 1945 முதல் அமெரிக்காவின் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த இயுக்யூ தீவுகள் மீண்டும் சப்பானிடம் ஒப்படைக்கப்பட்டது.
1974 – பாலத்தீன விடுதலைக்கான சனநாயக முன்னணிப் போராளிகள் இசுரேலியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தாக்கியதில் 22 மாணவர்கள் உட்பட 31 பேர் கொல்லப்பட்டனர்.
1976 – உக்ரைன், வினீத்சியாவிலிருந்து மாஸ்கோ நோக்கிப் புறப்பட்ட ஏரோபுலொட் வானூர்தி 1802 வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும் உயிரிழந்தனர்.
1985 – குமுதினி படகுப் படுகொலைகள், 1985: நெடுந்தீவு மாவலித்துறையில் இருந்து 64 பயணிகளுடன் புறப்பட்ட குமுதினி என்ற படகு இலங்கைக் கடற்படையினரால் வழிமறிக்கப்பட்டு குழந்தைகள், பெண்கள் உட்பட 36 பேர் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
1988 – ஆப்கான் சோவியத் போர்: எட்டு ஆண்டுகள் போருக்குப் பின்னர் சோவியத் ஒன்றியம் தனது 115,000 இராணுவத்தினரை ஆப்கானித்தானில் வெளியேற்ற ஆரம்பித்தது.
1991 – எடித் கிரசான் பிரான்சின் முதற் பெண் பிரதமரானார்.
2005 – திருகோணமலை நகர் மத்தியில் இரவோடிரவாக புத்தர் சிலை எழுப்பப்பட்டதில் அங்கு கலவரம் வெடித்தது.
2006 – வவுனியாவில் நோர்வே அகதிகள் சபைப் பணியாளர் ஜெயரூபன் ஞானபிரகாசம் சுட்டுக் கொல்லப்பட்டார்.
2008 – கலிபோர்னியா ஒருபால் திருமணத்தை அங்கீகரித்த இரண்டாவது அமெரிக்க மாநிலமானது. 2004 இல் மாசச்சூசெட்ஸ் அங்கீகரித்திருந்தது.
2013 – ஈராக்கில் இடம்பெற்ற வன்முறைகளில் 389 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்
1803 – ஆர்தர் காட்டன், பிரித்தானியப் படைத்தளபதி, பொறியியலாளர் (இ. 1899)
1817 – தேபேந்திரநாத் தாகூர், இந்திய மெய்யியலாளர், நூலாசிரியர் (இ. 1905)
1845 – இலியா மெச்னிகோவ், உருசிய விலங்கியலாளர் (இ. 1916)
1857 – வில்லியமினா பிளெமிங், இசுக்கொட்டிய-அமெரிக்க வானியலாளர் (இ. 1911)
1859 – பியேர் கியூரி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (இ. 1906)
1907 – சுக்தேவ் தபார், இந்திய விடுதலைப் போராளி (இ. 1931)
1908 – சு. ம. மாணிக்கராஜா, இலங்கை அரசியல்வாதி
1912 – புளிமூட்டை ராமசாமி, தென்னிந்திய நகைச்சுவை நடிகர்
1913 – ஆபிரகாம் செல்மனோவ், உருசிய வானியலாளர் (இ. 1987)
1915 – பவுல் சாமுவேல்சன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2009)
1922 – டி. கே. ராமமூர்த்தி, தமிழக இசையமைப்பாளர், வயலின் கலைஞர் (இ. 2013)
1928 – ஏ. ரி. பொன்னுத்துரை, இலங்கைத் தமிழ் நாடகக் கலைஞர் (இ. 2003)
1937 – மாடிலின் ஆல்பிரைட், செக்-அமெரிக்க அரசியல்வாதி, அமெரிக்காவின் 64-வது அரசுச் செயலாளர்
1951 – பிராங்க் வில்செக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
1954 – திருச்சி சிவா இந்திய அரசியல்வாதி
1967 – மாதுரி தீட்சித், இந்திய நடிகை
1983 – சந்தோஷ் நாராயணன், தமிழக இசையமைப்பாளர்
1987 – ஆண்டி முர்ரே, இசுக்கொட்டிய டென்னிசு வீரர்
இறப்புகள்
884 – முதலாம் மரீனுஸ் (திருத்தந்தை)
1886 – எமிலி டிக்கின்சன், அமெரிக்கக் கவிஞர் (பி. 1830)
1984 – லயனல் ராபின்ஸ், பிரித்தானியப் பொருளியலாளர் (பி. 1898)
1989 – எஸ். ஆர். கனகநாயகம், இலங்கை அரசியல்வாதியும், வழக்கறிஞர் (பி. 1904)
2010 – பைரோன் சிங் செகாவத், இந்தியாவின் 11வது குடியரசுத் துணைத்தலைவர் (பி. 1923)
2010 – ஜான் ஷெப்பர்ட் பேரோன், தன்னியக்க காசளிப்பு இயந்திரத்தைக் கண்டுபிடித்த பிரித்தானியர் (பி. 1925)
சிறப்பு நாள்
விடுதலை நாள் (பரகுவை, எசுப்பானியாவிடம் இருந்து 1811)
ஆசிரியர் நாள் (கொலம்பியா, மெக்சிக்கோ, தென் கொரியா)
அன்னையர் நாள் (பரகுவை)
குடியரசு நாள் (லிதுவேனியா)
பன்னாட்டுக் குடும்ப நாள்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews