54 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல: தமிழக அரசு அரசாணை வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, May 15, 2019

54 பட்டங்கள் அரசு வேலைக்கு தகுதியானது அல்ல: தமிழக அரசு அரசாணை வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் குறிப்பிட்ட பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழங்கும் 50-க்கும் மேற்பட்ட பட்ட படிப்புகள் அரசு வேலை பெற தகுதியானது அல்ல என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் பெரியார் பல்கலைக்கழகம் வழங்கும் பிசிஏ பட்டம், பிஎஸ்சி கணிதத்திற்கு சமமல்ல என்று கூறியுள்ளது. பாரதிய பல்கலைக்கழகம் மற்றும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவை வழங்கும் எம்எஸ்சி நுண்ணுயிரியல் பட்டம் பணிக்கு ஏற்கப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
காமராஜர் பல்கலைக்கழகம் வழங்கும் எம்எஸ்சி, நுண்ணுயிரியல் முதுகலைப்படிப்புகள், எம்எஸ்சி விலங்கியல் முதுகலைப்படிப்புக்கு நிகரானவை அல்ல என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அரசு வேலை வாய்ப்புக்கு தகுதியாக கருதப்படும் பட்டபடிப்புகள் நிகராக 50 க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளை கருத முடியாது என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு 33 பட்ட மேற்படிப்புகள் அரசு வேலைவாய்ப்பிற்கு தகுதியற்றவை என அரசு அறிவித்தது குறிப்பிடத்தக்கது. Click here - Equivalence of Degrees And Non - Equivalence of Degrees - Equivalence Committee Orders...
அரசுப் பணியில் சேர்க்கப்படுவோரின் பட்டப் படிப்புகள் மற்றொரு படிப்புக்கு இணையானவையா இல்லையா என்பதில் 100 பட்டப்படிப்புகள் இணையில்லாதவை(Non-Equivalence) என்று அரசு ஆணையிட்டுள்ளது.
அரசுப் பணிகளில் சேர்க்கப்படும் நபர்கள் கல்வித்தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வுகளில் பங்கேற்போர் அரசுப் பணிக்கு தகுதியானர்களா என்று நிர்ணயம் செய்வதில் அவர்கள் படித்துள்ள பட்டப் படிப்புகள் ஏற்புடையதா என்று தேர்வுக் குழுவினர் தெரிந்து கொள்ள வசதியாக எந்தெந்த படிப்புகள் எதற்கு இணையானவை(Equivalence) அல்லது இணை இல்லாதவை(Non-Equivalence) என்று முடிவு செய்வதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 11ம் தேதி 60வது இணைக்குழு கூட்டம்(Equivalence Committee Meeting) நடந்தது. அந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர், இணைக் குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
அவர்கள் தலைமையில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்படி, பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் பட்டப் படிப்புகள், இணையானவை, இணை இல்லாவை என 100 படிப்புகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு அது தொடர்பாக அரசாணை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. தமிழ்நாடு அரசப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர், இணைக்குழுவின் உறுப்பினர் செயலாளர் ஆகியோர் அனுப்பிய பட்டில்களை அரசு கவனமுடன் பரிசீலித்து, அந்த பட்டிலுக்கு ஒப்புதல் அளித்து அரசாணை( எண் 66, 24.4.19) பிறப்பித்துள்ளது. அந்த ஆணை அனைத்து பல்கலைக் கழகம், கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தற்போது பள்ளிக் கல்வித்துறைக்கும் இந்த பட்டியல் தொடர்பான அரசாணை வந்துள்ளது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ள இணை மற்றும் இணையில்லா படிப்புகள் ஆசிரியர் பணி நியமனத்தின் போதும் பரிசீலிக்கப்பட உள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews