LIC AAO Recruitment: விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

LIC AAO Recruitment: விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
எல்.ஐ.சி நிறுவனத்தில் துணை நிர்வாக அதிகாரி பணிக்கான தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. ஏப்ரல் 30ம் தேதி வரையில் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய அமைப்பான எல்.ஐ.சி.,யில், காலியாக உள்ள துணை நிர்வாக அதிகாரி பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் வெளியானது. மார்ச் 2ம் தேதி முதல் 22ம் தேதி வரையில் இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன.
இந்நிலையில், தற்போது எல்.ஐ.சி தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு நேற்று முதல் நுழைவுச் சீட்டு வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இதனை எல்.ஐ.சி.,யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.licindia.in/ அல்லது https://ibpsonline.ibps.in/licaaofeb19/ என்ற பக்கத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நுழைவுச்சீட்டு ஏப்ரல் 30ம் தேதி வரையில் மட்டுமே பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். நுழைவுச்சீட்டு இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்வது எப்படி?
படி 1: விண்ணப்பதாரர்கள் www.licindia.in என்ற இணைதளம் செல்ல வேண்டும்
படி 2: முதல் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள AAO Recruitment 2019’ என்ற லிங்கை க்ளிக் செய்ய வேண்டும்
படி 3: உள்நுழைய பதிவு எண்ணை பயன்படுத்தலாம்.
படி 4: பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை எண்டர் செய்யவும்
படி 5: இறுதியாக உங்களது ஹால் டிக்கெட் திரையில் காட்டப்படும்.
படி 6: ஹால் டிக்கெட்டை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ளவும்
படி 7: நுழைவுச் சீட்டு இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மொத்த காலி பணி இடங்கள் 590
முக்கிய தேதிகள்
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் மார்ச் 2, 2019
விண்ணப்பப் பதிவுக்கு கடைசி நாள் மார்ச் 23, 2019
முதல்நிலை தேர்வுக்கு கால் லெட்டர் டவுன்லோட் செய்ய அவகாசம் ஏப்ரல் 22-30, 2019
ஆன்லைனில் முதல்நிலை தேர்வுக்கான உத்தேச தேதி மே 4-5, 2019
ஆன்லைனில் முக்கியத் தேர்வுக்கான உத்தேச தேதி ஜூன் 28, 2019
மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
1. முதல் நிலைத் தேர்வு (Prelims)
2. முக்கிய தேர்வு அல்லது மெயின் தேர்வு (Mains)
3. நேர்முகத் தேர்வு (Interview)
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews