தமிழக அரசின் தவறுக்காக ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைப்பதா- மே பதினேழு இயக்கம் கண்டனம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Monday, April 29, 2019

தமிழக அரசின் தவறுக்காக ஆசிரியர்களின் சம்பளத்தை நிறுத்தி வைப்பதா- மே பதினேழு இயக்கம் கண்டனம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Facebook🌍Page👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here WhatsApp Groupல் உடனுக்குடன் செய்திகளை பெற Add 9123576459
தமிழகத்தில் கடந்த 8ஆண்டுகளாக அரசு உதவி பெறும் பள்ளிகளில் வேலை பார்த்துவரும் 1500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை தமிழக அரசு வழங்காமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இதற்கான காரணமாக அரசு சொல்வது அக்டோபர் 23 ’ 2010 பிறகு ஆசிரியர் பணியில் சேர்ந்தவர்கள் அடுத்த ஐந்தாண்டுக்குள் TET எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றால் மட்டுமே அவர்கள் ஆசியர்களாக கணக்கில் கொள்ளப்படுவார்கள். ஆனால் இவர்கள் இன்னும் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெறவில்லை ஆகவே தான் இவர்களுக்கு சம்பளம் வழங்கவில்லையென்று சொல்லுகிறது.
ஆனால் உண்மை என்னவென்றால் ஆசியர் தகுதி தேர்வை தமிழக அரசு அறிவித்தது நவம்பர் 15,2011 அன்று தான். ஆகவே அன்றிலிருந்து தான் இந்த சட்டமே அமலுக்கு வரமுடியுமே ஒழிய அதற்கு ஒரு வருடத்திற்கு முன்னால்அதாவது அக்டோபர் 23,2010 அன்று அரசின் நேர்முகத்தேர்வின் மூலம் வேலைக்கு சேர்ந்தவர்களையும் சம்பந்தமேயில்லாமல் தகுதி தேர்வு எழுத சொல்வதே முதலில் அநியாயம். பின் அதை காரணம் காட்டி அவர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்வதெல்லாம் கொடுமையிலும் கொடுமை. இதையெல்லாம் தாண்டி அரசு சொல்கிறது என்பதற்காக சட்டமியற்றப்பட்ட காலத்திற்கு ஒரு வருடத்திற்கு முன்னால் வேலைக்கு சேர்ந்தவர்களும் தகுதி தேர்வு எழுத வேண்டுமென்றே வைத்துக்கொள்வோம் .அப்போது அவர்களுக்கு தமிழக அரசு சில விதிகளை விதித்தது அதாவது இவர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் நடத்தப்படும் 10தகுதி தேர்வுக்குள் பாஸ் ஆகவேண்டுமென்பது தான் அது. ஆனால் அரசு கடந்த ஐந்தாண்டுகளில் இதுவரை 3முறை மட்டுமே தகுதி தேர்வையே நடத்தியிருக்கிறது. ஆக ஐந்தாண்டுகளில் 10தேர்வை நடத்தவேண்டிய அரசு நடத்தாமல் விட்டது யார் குற்றம்.
ஒருவேளை அரசு தகுதி தேர்வை அறிவித்தபின் அந்த தேர்வை எழுதாமல் யாரேனும் பணியில் சேர்ந்திருந்தால் இதை கவனிக்காமல் அவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கிய அரசுதான் இதில் முதல் குற்றவாளியே தவிர ஆசிரியர்கள் எப்படி இதற்கு பொறுப்பாவர்கள்.
இப்படி தமிழக அரசு மொத்த தவறையும் செய்து விட்டு ஆசிரியர்களின் சம்பளத்தை தாராமல் இருப்பது அநியாயம். ஆகவே உடனடியாக அரசு உதவிபெறும் பள்ளிகளில் இருக்கிற ஆசிரியகளின் சம்பளத்தை வழங்க வேண்டுமென்று மே பதினேழு இயக்கம் கேட்டுக்கொள்கிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews