கட்சிகள் பிடியில் கல்லுாரி மாணவர்கள் வன்முறையை துாண்ட திட்டமா? - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, April 07, 2019

கட்சிகள் பிடியில் கல்லுாரி மாணவர்கள் வன்முறையை துாண்ட திட்டமா?

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Share This News To Ur Groups& Add 9123576459
லோக்சபா தேர்தலுக்கு, இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், முக்கிய கட்சிகள், தங்களுக்கு ஆதரவாக செயல்படுமாறு, கல்லுாரி மாணவர்களை, மூளைச்சலவை செய்து, வன்முறையை துாண்ட முயற்சித்து வருகின்றன.

தமிழகத்தில், ஹிந்தி எதிர்ப்பு, இலங்கை தமிழர் பிரச்னை, காவிரி விவகாரம் உள்ளிட்ட போராட்டங்களில், மாணவர்களின் பங்கு அதிகம். பொதுக்கூட்டம்தி.மு.க., - அ.தி.மு.க., துவங்கிய காலகட்டங்களில், அவற்றின் வளர்ச்சிக்கு, கல்லுாரி மாணவர்கள், முக்கிய பங்காற்றினர். அவர்கள் படிப்பதுடன், பகுதி நேர வேலை பார்த்து, தங்கள் குடும்பத்தையும் கவனித்தனர்.இதனால், அவர்களின், அரசியல் செயல்பாடுகளை, குடும்பத்தினர் எதிர்க்கவில்லை.
முழு நேர அரசியல்வாதிகளாக மாறிய மாணவர்களுக்கு, இரு திராவிட கட்சிகளும், சட்டசபை, லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து, எம்.எல்.ஏ., - எம்.பி., மற்றும் அமைச்சர் போன்ற பதவிகளை வழங்கின.சமீப காலமாக, அரசியல் கட்சிகள், ஜாதி தலைவர்கள், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு கூட்டத்தை காட்டவே, மாணவர்களை பயன்படுத்தி வருகின்றன. இதற்காக, பிற ஊர்களில் இருந்து வந்து, விடுதிகளில் தங்கி யுள்ள மாணவர்களை சந்தித்து, பிரியாணி, பணம் போன்றவற்றை வழங்கி, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.

லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளில், வரும், 18ல், இடைத்தேர்தலும் நடக்கிறது. இதற்காக, தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள், தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.ஜெயலலிதா, கருணாநிதி போன்றோர், முன்பு பிரசாரத்திற்கு சென்ற போது திரண்டது போல், தற்போது, எந்த தலைவர்களுக்கும்கூட்டம் சேரவில்லை. இதனால், தேர்தல் குறித்த சுவடே தெரியாமல், மக்களும் உள்ளனர்.
அறுவடை:

இந்நிலையில், முக்கிய கட்சிகளின் நிர்வாகிகள், தேர்தல் நெருக்கத்தில், மாணவர்களை துாண்டி விட்டு, கலவரம் ஏற்படுத்தி, அவற்றை ஓட்டுகளாக அறுவடை செய்ய திட்டமிட்டு இருப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து, கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறியதாவது: சென்னையில், அரசு கல்லுாரி மாணவர்கள் தங்கிப் படிக்க, பல இடங்களில், விடுதிகள் உள்ளன. இதேபோல், மாவட்டங்களிலும், விடுதிகள் உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியில், இரு முக்கிய ஜாதி கட்சிகள் உள்ளன.
தமிழ், தமிழன் என்று சொல்லி பிழைப்பு நடத்தும் கட்சியினரும், தற்போது, தேர்தலில் போட்டியிடுகின்றனர்.ஜாதி கட்சிகளின் நிர்வாகிகளும், வயிற்று பிழைப்புக்கு கட்சியை நடத்தும் சிலரும், தேர்தலை ஒட்டி, மாணவர்களை சந்திக்கின்றனர்.கலப்பு திருமணம், 'நீட்' தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக, உணர்ச்சிப்பூர்வமாக பேசி, அந்த விபரங்களை, பிரசாரம் செய்யுமாறும்; எதிர்ப்பவர்கள் மீது தாக்குதல் நடத்துமாறும் துாண்டி விடுகின்றனர்.

சில கட்சிகள், மாணவர்களுக்கு, தலா, 200 ரூபாய் கொடுத்து, தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி வருகின்றன. எனவே, பெற்றோர், விடுமுறை நாட்களில், தங்கள் பிள்ளைகளை தனியாக விடுவதை தவிர்த்து, நேரடி கண்காணிப்பில் வைத்து கொள்ள முன்வர வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank u
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
கணினிக்கல்வி செய்திகளை உங்கள் WhatsApp Groupல் உடனடியாக பெறுவதற்கு 9123576459 இந்த எண்ணை இணைக்கவும்

Total Pageviews